இலங்கை வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
இலங்கை வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

இலங்கையின் சில பகுதிகளில் அடுத்து வரக்கூடிய நாட்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக  எதிர்வரும் 13 ம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,இக் காலத்தில் தோன்றுகின்ற தாழமுக்கங்கள் பங்களாதேஷ் அல்லது மியன்மாரை நோக்கியே செல்வதுண்டு. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. 

அத்தோடு நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு வெப்பச்சலனம் காரணமாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த மழை வெப்பச் சலன மழை என்பதனால் இடி மின்னலுடன் இணைந்ததாகவே இருக்கும். 

எனவே இடி மின்னல் தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது நிலவும் அதிகமான வெப்பநிலை தற்காலிகமாக எதிர்வரும் வாரம் சற்று குறைவாக இருக்கும். 

எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு தற்போது நிலவும் அதிகளவிலான வெப்பநிலையே நிலவும்” எனத் தெரிவித்துள்ளார்.