மகர ராசியினருக்கு தெய்வ சிந்தனை மனதில் அதிகரிக்கும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 week ago
மகர ராசியினருக்கு தெய்வ சிந்தனை மனதில் அதிகரிக்கும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நெருக்கடி நீங்கி நலம் காணும் நாள். உங்கள் முயற்சி இன்று வெற்றியாகும். வரவு அதிகரிக்கும்.பரணி: உங்கள் முயற்சி இன்று இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.கார்த்திகை 1: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். அரசு வழி முயற்சி லாபமாகும். 

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நன்மை அதிகரித்து நலம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.ரோகிணி: வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர். செயல்களில் சில சங்கடம் தோன்றும்.மிருகசீரிடம் 1,2: நினைத்தது நிறைவேறும் நாள். உங்கள் செல்வாக்கு உயரும். செயல்கள் ஆதாயமாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். வரவு அதிகரிக்கும். யோகமான நாள்.திருவாதிரை: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். தொழிலில் சில நெருக்கடி தோன்றும். எதிர்பார்த்த பணம் வர தாமதமாகும். புனர்பூசம் 1,2,3: அடிப்படைத் தேவை பூர்த்தியாகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: பெரியோர் ஆதரவால் பிரச்னை தீரும் நாள். உங்கள் முயற்சி லாபமாகும். பிள்ளைகளால் நன்மை அதிகரிக்கும்.பூசம்: வருவாயை எதிர்பார்த்து மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.ஆயில்யம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். 

சிம்மம்

மகம்: வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். செயல் லாபத்தில் முடியும். எதிர்பார்த்த வருமானம் வரும்.பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.உத்திரம் 1: நெருக்கடியிலும் நன்மைகளை அடையும் நாள். பணிபுரியும் இடத்தில் தேவையற்ற பிரச்னை தோன்றும்.

கன்னி

உத்திரம் 2,3,4: உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். மாலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும்.அஸ்தம்: கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். பயணத்தில் சில சங்கடம் காணும் நாள்.சித்திரை 1,2: முயற்சி நிறைவேறும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.

துலாம்

சித்திரை 3,4: தடைகளைத் தாண்டி முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். உடல்நிலை சீராகும். எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள்.சுவாதி: தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். எதிர்ப்பு விலகும். வழக்கு தள்ளிப்போகும்.விசாகம் 1,2,3: செயலில் இருந்த தடை நீங்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் செயலில் லாபம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்னை இன்று முடியும்.அனுஷம்: முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். இழுபறியாக இருந்த வேலை பெரியோர் ஆதரவுடன் நிறைவேறும்.கேட்டை: நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் தடையை சந்திப்பீர். உறவினர்களால் நெருக்கடி உண்டாகும்.

தனுசு

மூலம்: உற்சாகத்துடன் செயல்படுவீர். முயற்சி பலிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.பூராடம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நண்பர்கள் ஆதரவால் எண்ணம் ஈடேறும். வருமானத் தடை விலகும். உத்திராடம் 1: நீங்கள் மேற்கொண்ட செயலை செய்து முடிப்பீர். இழுபறியாக இருந்த வேலை முடியும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரம் விருத்தியாகும் நாள். பணியாளர்கள் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி காண்பீர்திருவோணம்: மறைமுக எதிர்ப்பால் மனதில் குழப்பம் உண்டாகும். நிதானமான செயல்பட்டு நன்மை அடையவேண்டிய நாள்.அவிட்டம் 1,2: வரவேண்டிய பணம் வரும். குடும்பக்குழப்பம் விலகும். தெய்வ சிந்தனை மனதில் அதிகரிக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரியின் எண்ணம் நிறைவேறும் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பங்கு சந்தையில் லாபம் காண்பீர்.சதயம்: உடல் நிலையில் சில சங்கடம் தோன்றும். வாழ்க்கைத் துணையுடன் மனஸ்தாபம் உருவாகும்.பூரட்டாதி 1,2,3: குடும்ப நலன் கருதி நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பண வரவு அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: சங்கடம் விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்.உத்திரட்டாதி: நன்மையான நாள். செயல்களில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். உத்தியோக பிரச்னை முடிவிற்கு வரும்.ரேவதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். எதிர்பாராத நெருக்கடிகளால் குழப்பத்திற்கு ஆளாவீர்.