விருச்சிக ராசியினருக்கு வெற்றிக்கு சாதகமான நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 weeks ago
விருச்சிக ராசியினருக்கு வெற்றிக்கு சாதகமான நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளில் சிரமம் உண்டாகும். கவனமுடன் செயல்படவும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் செயல் லாபமாகும். நினைத்தது நடக்கும் நாள்.கார்த்திகை 1: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். வராமல் இருந்த பணம் வரும். நண்பர்களால் நன்மை உண்டு.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் முயற்சி லாபமாகும். வெளியூர் பயணம் லாபம் தரும்.ரோகிணி: மனக்குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் சிரமம் உண்டாகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: இரு நாள் நெருக்கடி விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும் நாள்.திருவாதிரை: தேவையற்ற விவாதங்களை தேடிச் செல்லாதீர். பழைய பிரச்னை மீண்டும் நெருக்கடிக்கு ஆளாக்கும். புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் சில குழப்பம் ஏற்பட்டு விலகும். முயற்சி இழுபறியாகும்.

கடகம்

புனர்பூசம் 4: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத் துணையின் வழிகாட்டுதலுடன் லாபம் காணும் நாள்.பூசம்: வெளியூர் பயணத்தில் லாபம் உண்டாகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.ஆயில்யம்: எதிர்பார்த்த நன்மை நடைபெறும் நாள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் முயற்சியில் ஈடுபடுவீர்.

சிம்மம்

மகம்: திட்டமிட்ட செயல்களை செய்து முடித்து லாபம் காணும் நாள். எதிர்த்து செயல்பட்டவர் விலகுவர். பூரம்: உடலில் இருந்த சங்கடம் தீரும். வருமானத்திற்குரிய முயற்சி வெற்றியாகும் நாள்.உத்திரம் 1: வெளி இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு வரவேற்பு இருக்கும். போட்டியாளர் விலகும் நாள்.

கன்னி

உத்திரம் 2,3,4: உயர்ந்தவர்களை சந்திப்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும். முயற்சி லாபமாகும் நாள்.அஸ்தம்: செய்துவரும் தொழிலில் சிரமம் உண்டாகும். முயற்சியில் இழுபறி ஏற்படும். நிதானம் தேவை. சித்திரை 1,2: புதிய பொறுப்பு உங்களைத் தேடிவரும். அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும் நாள்.

துலாம்

சித்திரை 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வெளியூர் பயணம் லாபம் தரும். மகிழ்ச்சியான நாள்.சுவாதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். எதிர்பாராத நெருக்கடி தோன்றி மறையும் நாள்.விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். சேமிப்பில் கவனம் செல்லும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: கவனமுடன் செயல்பட்டு லாபம் அடைவீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். அனுஷம்: நம்பிக்கையுடன் செயல்பட்டும் வரவில் தடையே ஏற்படும். நன்றாக பழகியவர்களும் புரிந்து கொள்ளாமல் போவார்.கேட்டை: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். உங்கள் முயற்சி வெற்றியாகும். சாதகமான நாள்.

தனுசு

மூலம்: நீங்கள் மேற்கொண்ட செயலை செய்து முடிப்பதில் சிரமம் உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்வீர். பண வரவில் இருந்த தடை விலகும். நிதிநிலை உயரும். உத்திராடம் 1: உங்கள் அணுகுமுறையால் போட்டியாளர் விலகுவர். மேற்கொள்ளும் செயல் முழுமையடையும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உறவினர் ஆதரவுடன் நீண்டநாள் பிரச்னைக்கு முடிவு காண்பீர். குழப்பம் நீங்கும் நாள்.திருவோணம்: தேவையற்ற சிந்தனைகளால் குழப்பம் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்களிலும் மாற்றம் உண்டாகும்.அவிட்டம் 1,2: புதிய வாய்ப்பு தேடி வரும். கவனமுடன் செயல்படுவீர்கள். 

கும்பம்

அவிட்டம் 3,4: அலைச்சல் அதிகரித்தாலும் முயற்சி வெற்றியாகும். தொலைந்துபோன பொருள் கிடைக்கும். சதயம்: நடைபெறாத முயற்சியை நினைத்து வருந்துவீர். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். செயலில் கவனம் தேவை. 

மீனம்

பூரட்டாதி 4: உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். செயலில் லாபம் உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.உத்திரட்டாதி: எதிர்பாராத சங்கடம் தோன்றும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் இழுபறியாகும். கவனம் தேவை.ரேவதி: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். நெருக்கடி குறையும் நாள்.