ரஃபா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 22 பேர் மரணம்

#Death #people #Attack #Israel #Gaza #air
Prasu
2 weeks ago
ரஃபா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 22 பேர் மரணம்

காசாவின் தெற்கு பகுதியான ரஃபா நகர் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதில் ஆறு பெண்கள், ஐந்து குழந்தைகள் அடங்குவார்கள். ஒரு குழந்தை பிறந்து ஐந்தே நாட்கள் ஆன நிலையில் உயிரிழந்துள்ளது. எகிப்து நாட்டின் எல்லையோரம் உள்ள ரஃபா ஹமாஸ் அமைப்பினரின் கோட்டையாக திகழ்வதாக இஸ்ரேல் கூறி வருகிறது. 

இதனால் ரஃபா மீது தரை தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருகிறது. ரஃபா நகரில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள். காசா முனையில் உள்ள பெரும்பாலான மக்கள் ரஃபா நகருக்கு குடிபெயர்ந்து முகாம்களில் வசித்து வருகின்றனர்.

மனிதாபிமான பேரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் ரஃபா மீது தரைவழி தாக்குதல் நடத்தக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் சவுதி அரேபியா சென்றுள்ளனர். 

இவர் இஸ்ரேல் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. காசாவிற்கு மேலும் உதவிப் பொருட்கள் சென்றடைய இஸ்ரேல் வழிவகை செய்ய வேண்டும். இருந்தபோதுிலும், மனிதாபிமான நெருக்கடியை தணிக்க இரு தரப்பிலும் போர் நிறுத்தம் செய்து கொள்வது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.