பகிஷ்கரிப்பா? பொது வேட்பாளரா? சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்: பேராசிரியர் ரகுராம்

#SriLanka
Mayoorikka
2 weeks ago
பகிஷ்கரிப்பா? பொது வேட்பாளரா? சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்:  பேராசிரியர் ரகுராம்

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரா? அல்லது பகிஷ்கரிப்பா என விஞ்ஞான ரீதியாக அல்லது அரசியல் ரீதியாக ஆராய்து எது மிக சரியானது என முடிவெடுக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் தெரிவித்துள்ளார்.

 பொது வேட்பாளர், பகிஷ்கரிப்பு இரண்டும் ஒரு புள்ளியில்தான் சந்திக்கின்றன. இதில் எது மிக சரியானது என விஞ்ஞான பூர்வமாக அரசில் பூர்வமாக ஆராய்து முடிவெடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்தல் நாங்கள் இப்போது இருக்கின்றோம். எந்தக் கட்டத்திலும் சிங்கள அரசியல் சக்திகளை, சிங்கள அரசியல்வாதிகளை அடுத்து வரக்கூடிய ஆளும் தரப்புக்களை நாங்கள் நம்பவே முடியாது என்பதை அன்றிலிருந்து இன்று வரை வரலாறு எங்களுக்கு திரும்பி திரும்பி திரும்பி சொல்ல வந்தாலும் கூட அதை மறுத்து நாங்கள் குறுக்கு ஓட்டம் ஓடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்ற மாமனிதர் தராகி அவர்களது 19 வது நினைவேந்தலில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவித்ததாவது,

 இங்கு இருக்கக்கூடிய தமிழ் ஆங்கில பத்திரிகைகளுக்கு அதிகமாக எங்கெங்கு தளங்கள் கிடைக்கிறதோ அங்கெல்லாம் எங்களுடைய நியாயத்தை மிக அற்புதமான புலமைத்துவ எழுத்தோடு. அவர் சொல்லி வந்தார். தமிழ் நெற் ஆசிரியர் குழாமில் அவர் இருந்தபோது வரைந்த கட்டுரைகள், தமிழ் நெற்றிக்கு ஊடாக அவர் சொல்லிய செய்திகள் மிக முக்கியமானவை.

 நாங்கள் பழைய செய்திகளை எடுத்து பார்க்கும்போது தேவையான உஷாத்துணை தேடும் போதும் எல்லாம் சிவராம் அண்ணனுடைய கட்டுரைகள் இன்றைக்கும் எங்களுக்கு உதவிக் கொண்டிருக்கின்றன. சர்வதேச அரசியலை உள்ளக அரசியலை அவர் தெளிவாக புரிந்திருந்துவைத்திருந்தார். 

தெற்கு அரசியலையும் அவர் தெளிவாகப் புரிந்திருந்தார். அதற்கு தான் இந்த நினைவு மீட்டலின் ஒரு கடைசி பகுதியாக நான் வரவேண்டும் தெற்கு அரசியலில் அவருக்கு ஆரம்பத்திலை ஒரு நாட்டம் இருந்தது தெற்கு அரசியலில் அவருக்கு இருந்த தொடர்புகள், குறிப்பாக ஆரம்ப காலகட்டத்தில் அவர் சார்ந்த அமைப்பு ஜேவிபியுடன் கொண்டிருந்த தொடர்புகள் வழியாக தெற்கிலே எங்களுடைய போராட்டத்தின் நியாயப் பாடுகளை, எங்களுடைய போராட்டத்தின் வலுவை, செல்நெறியை எடுத்துச் செல்லலாம் என்ற ஒரு மிகப்பெரிய ஆர்வம் அவருக்கு இருந்தது. அதனை அவர் தனது எழுத்துக்களின் மூலம் எழுதி இருந்தார். 

பல சந்திப்புகளிலும் அவர் எடுத்துரைத்திருந்தார். புத்திஜீவிகளுடனான சந்திப்புகள், தெற்கு அரசியல் கட்சிகளுடனான சந்திப்புகள், சமூக செயற்பாட்டாளர்களுடனான சந்திப்புகள், என்று பல சந்திப்புக்களையும் அவர் நிகழ்த்தியிருந்தார். அவருக்கு ஏராளமான சிங்கள நண்பர்கள் இருந்தார்கள். பத்திரிகை நண்பர்கள். ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சிகள் என்று பலர் இருந்தார்கள்.

 ஆனால் ஒரு கட்டத்திலே சிவராம் அவர்கள் ஒரு மிகத் தெளிவான முடிவுக்கு வந்தார். சிங்களவர்களை நாம் மாற்ற முடியாது. சிங்கள அரசியல்வாதிகளை நாம் மாற்ற முடியாது, சிங்கள அரசியல் சூழலை நாம் மாற்ற முடியாது. என்ற ஒரு தெளிந்த நிலைப்பாட்டி அவர் வந்தார்.

 அது புத்திஜீவிகளாக இருக்கலாம். அரசியல் கட்சிகளாக இருக்கலாம். அல்லது சமூக செயற்பாட்டாளர்களாக இருக்கலாம். அவர்களுக்கு ஏதோ ஒரு வரையறை அவர்களுக்குள் ஆழமாக. அவர்களுக்குள் இறங்கியிருக்கக்கூடிய கருத்தியல் தளத்திற்கு அப்பாலே அவர்கள் எங்களுக்காக சிந்திப்பார்கள், அல்லது எங்களுடைய நியாயங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்பது எல்லாம் ஒரு பொய்க் கதை என்பதை அவர் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியிருநதார். இன்றைக்கு நாங்கள் அந்த சந்தியில் தான் மீண்டும் வந்து நிற்கின்றோம்.

 எந்தக் கட்டத்தில் சிங்கள அரசியல் சக்திகளை, சிங்கள அரசியல்வாதிகளை அடுத்து வரக்கூடிய ஆளும் தரப்புக்களை நாங்கள். நம்பவே முடியாது என்பதை அன்றிலிருந்து இன்று வரை வரலாறு எங்களுக்கு திரும்பி திரும்பி திரும்பி சொல்ல வந்தாலும் கூட அதை மறுத்து நாங்கள் குறுக்கு ஓட்டம் ஓடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

 உண்மையில் சிவராம் அவர்களுடைய நினைவு மீட்டலிலே நான் சொல்லக்கூடிய விடயமும் அதுதான் எங்களை விடவும் சிங்கள மக்களுடன் சிங்கள அரசியல் கட்சிகளும் சிங்கள அரசியல் தலைவர்கள் மிக ஆழமான, நெருக்கமான உறவைக் கொண்டு இருந்தவர். சந்திப்புகளை நடாத்தியிருந்தவர். அவர் பட்ட அனுபவம் என்பது பெற்ற அனுபவம் என்பது. சிங்கள அரசியல் சக்திகளை அல்லது சிங்கள ஆளும் தரப்புக்களையோ அல்லது அடுத்த வரப்போகுன்ற நம்பிக்கை தரக்கூடியதாக நாங்கள் கற்பிதம், கற்பனை செய்கின்ற விடயங்களையோ அவர் நம்ப தயாராகவே இல்லை.

 இதுதான் இன்றைக்கு எங்களுக்கு கிடைக்கின்ற செய்தி  சிங்களத்தில் இன்றைய அரசியல் சூழலோடு சிவராமன் அண்ணனை நாங்கள் மீட்டுப் பார்க்கின்றபோது சிவராமன் அண்ணனை ஒரு உஷா துணையாக கொண்டு பார்க்கின்ற போது எங்களுக்கு கிடைக்கின்ற செய்தி நாங்கள் யாரையும் நம்ப முடியாது. எவரையும் நம்ப முடியாது யாருக்காகவும் எங்களுடைய பெருமதியான வாக்குகளை நாங்கள் அழிக்கவும் முடியாது.

 ஆகவே எங்களுக்கு இருக்கக்கூடிய தேரிவுகள் எது என்பதை, எது சரியான தெரிவு என்பதை அது பொது வேட்பாளர் இருக்கலாம், அல்லது நாங்கள் வாக்களிக்காமலே ஒதுங்கி இருக்கலாம் அல்லது இந்த இரண்டு தெரிவுகளிலே எது சரியானது என்பதை நாங்கள் விஞ்ஞான ரீதியாக அறிவியல் பூர்வமாக செய்யவேண்டும். உண்மையில் இந்த இரண்டு நிலைப்பாடுகளுமே ஒரு ஒருமித்த புள்ளியில்தான் இருப்பதை தான் நான் உணர்ந்து பார்க்கிறேன். 

 அதாவது சிங்கள அரசியல் சக்திகளை நாங்கள் நம்பவே முடியாது  இந்த தேர்தல் இருந்து பூரணமாக நிராகரிப்பதாக அல்லது விலகிக் கொள்வதாக இருந்தாலும் சரி

 ஒரு வேட்பாளர் வேட்பாளராக நாங்கள் தேடுவதாக இருந்தாலும் சரி, இந்த இரண்டு நிலைப்பாடுகளும் ஏதோ ஒரு வகையில் ஒரு புள்ளிகள் தான் சந்திக்கின்றன. அது தெற்கு அரசியலை நாங்கள் நம்ப முடியாது. எதிர்காலத்துக்காக நாங்கள் எங்களை பணயம் வைக்க முடியாது என்பதைத்தான் சொல்கின்றன இந்தக் கட்டத்தில் எது சரி என்பதை நாங்கள் கட்சி அரசியல் சார்ந்து இல்லாமல்மக்கள் நலனை முன்னிறுத்தி ஒரு விஞ்ஞான பூர்வமாக அரசியல் அறிவுபூர்வமாக நாங்கள் தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

 ஆகவே இதற்கு மேலாக இந்த இடத்திலே எதனையும் சொல்ல விரும்பவில்லை இந்த இடத்திலே நான் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நிச்சியமாக அது சிங்கள அரசியல் சக்கிகளுக்காக நாங்கள் எப்போதுமே ஆதரவாக இருக்க முடியாது அது ஒரு தவறான வழிகாட்டலாக தான் இருக்கும் என்கின்ற சிவராமன் அவர்களுடைய பட்டறிவை நாங்கள் மீண்டும் இந்த நினைவு கூரலிலே எங்கள் மனங்களில் ஏற்றுக்கொண்டு நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக நாங்கள் ஒரு துரிதமாக ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். 

 அந்த வகையில் சிவராமன் அவர்கள் என்றைக்கும் எங்களுக்கு ஒரு உஷா துணையாக இருப்பார் என்கின்ற. அவளுடைய அரசியல் பாத எங்களுடைய போராட்ட பாதை. கற்றுத் தந்திருக்க கூடிய பல் பரிமாணம் மிக்க ஒரு ஊடக ஆளுமை இவற்றுக்கெல்லாம் அவர்தான் ஒரு முழு உதாரணமாக எங்கள் கண் முன் நிற்கின்றார், அவரை வணங்கிவரவேற்கின்றோம்என்றார்.