மாஸ்கோ தாக்குதல் குறித்து புதிய குற்றச்சாட்டை முன்வைக்கும் ரஷ்யா

#Death #Attack #Russia #Country #Moscow #Allegation
Prasu
1 month ago
மாஸ்கோ தாக்குதல் குறித்து புதிய குற்றச்சாட்டை முன்வைக்கும் ரஷ்யா

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். 

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய அதிபர் புதின் குற்றம் சாட்டினார். 

அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "மாஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம்.

 இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பரதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன" என்றார்.