அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜயவர்தனவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜயவர்தனவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்து, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.

சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அப்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜானக பண்டார, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்து, இது தொடர்பான மேலும் இரண்டு ரிட் மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த மனுவை ஆராய்ந்து உண்மைகளை முன்வைப்பதற்கான திகதியை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார்.

அதன்படி, மனுவை மே 28-ம் திகதிக்கு அழைக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். சமூக மற்றும் சனசமூக நிலையத்தின் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய தந்தை ஜூட் வெர்னன் ரொஹான் சில்வா மற்றும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தேவகே சுரச் நிலங்க ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.  

பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.