வீட்டிலேயே குழந்தை பிரசவித்த இளம் வயது சிறுமி: விசாரணையில் வெளிவந்த திடுக்கி்டும் தகவல்!

#Sri Lanka #CHILDREN #Police
Yugaat day's ago

கண்டி, பூஜாபிட்டிய பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 29 வயதான திருமணமான நபரொருவரை பூஜாபிட்டிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பூஜாபிட்டிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குறித்த சிறுமி மேற்பட்ட சந்தேகநபருடன் நெருங்கிய தொடர்பை பேணிவந்துள்ள நிலையில், அவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.
 
இதன் விளைவாக குறித்த சிறுமி கர்ப்பமடைந்துள்ள நிலையில், தான் கருவுற்றிருப்பதை வீட்டாருக்கு தெரிவிக்காமல் மூடிமறைத்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், சில நாட்களுக்கு முன்பு இச்சிறுமி தனது வீட்டிலேயே குழந்தையொன்றை பிரசவித்துள்ள நிலையில், கடுமையான இரத்தப்போக்கு காரணமாக கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் காவல்துறைக்கு அறிவித்ததையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, கலகெதரவைச் சேர்ந்த 29 வயதான திருமணமான நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிறந்த குழந்தையின் மரபணு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, சந்தேகநபர் இன்று (15) கலகெதர நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பூஜாப்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.