கொழும்பில் பழங்கள் விற்பனை செய்யும் போர்வையில் நடக்கும் மோசமான செயல்!

#Colombo
Nilaat day's ago

சட்டவிரோதமான முறையில் தீர்வை வரி செலுத்தாமல் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கொள்ளுப்பிட்டி நகரின் கடை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
பழங்கள் விற்பனை செய்யும் போர்வையில், இந்த சிகரெட்டுக்களை சந்தேக நபர்கள் விற்பனை செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 
சந்தேக நபர்களிடம் இருந்து 12,000 சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
 
கைது செய்யப்பட்டவர்கள் மாலபே மற்றும் கடவத்த ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்