உலக சதுப்பு நில தினம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 2, திகதி கொண்டாடப்படுகிறது.

#history #today #Event
Kesariat year ago

ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் உலக சதுப்பு நில தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஈர நிலச் சூழல் தொகுதியானது உயிர்ப்பல்வகைமையைப் பொறுத்தவகையில் முக்கியமானதாகக் கொள்ளப்படுகிறது.

மேலும் சுற்றாடல் சமநிலையைப் பேணுவதற்கும் உகந்ததாக ஈர நிலத் தொகுதி காணப்படுகின்றது. அவ்வகையில் இவ்வாண்டுக்கான உலக சதுப்பு நில தினம் "எங்கள் எதிர்கால வாழ்க்கைக்கான ஈரநிலங்கள்: நிலையான வாழ்வாதாரங்கள்" என்ற தொனிப் பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

ஆறுகள், தாழ்நிலங்கள், ஈரமான புல்வெளிகள், கழிமுகங்கள், கழிமுக, கடலோர குடியிருப்பு பகுதிகள், சதுப்புநிலக்காடுகள், பவளத் திட்டுகள், மீன் குளங்கள், நெற்பயிர் நிலங்கள், நீர்த் தேக்கங்கள் என்பவை​யெல்லாம் ஈரநிலப்பட்டியலில் உள்ளடங்குகின்றது.

உலகம் முழுக்க மனிதனின் தொடர் செயல்களால் இவை மிகப்பெரிய அழிவை சந்திக்கின்றன. சுற்றுலா தளங்களை உருவாக்குதல், ரியல் எஸ்டேட் தொழில்கள் ஆகியனவும் இத்தகைய நிலங்களை அழிக்கின்றன.

பல்லுயிரி வளம், நிலத்தடி நீர் வளம், நீரை வடிகட்டி நன்னீர் ஆக்குதல், உணவுச்சங்கிலியின் உறுதியான பிணைப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் இவற்றின் அழிவு மேற்சொன்ன எல்லாவற்றையும் காணாமல் செய்கிறது

சுனாமி நம் நாட்டை தாக்கியபொழுது சதுப்பு நிலக் காடுகள் அதன் தாக்கத்தை பெருமளவில் குறைத்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுப்பதும் இடம் சார் காலநிலை, நுண் காலநிலை என ஒழுங்காக மழை, வெயில் ஆகியன அதனதன் காலங்களில் உண்டாவதையும் உறுதி செய்கிற வேலையையும் இவைதான் செய்து வந்திருக்கின்றன.

உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின.

பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன.

ஈரநிலக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

பிரத்யேக குணங்கள் கொண்ட புல் செடிகள், அரிய வகை மரங்கள், நீர் நிலைப் பறவைகள், சில வகை விலங்குகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து வாழும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உள்ளன. எவ்வித திட்டமிடலும் இல்லாமல் வேகமாக அதிகரித்து வரும் நகரமயமாக்கல், வேளாண் உற்பத்தி அதிகரிப்புக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அணைகள் உள்ளிட்ட கட்டுமானத் திட்டங்கள், குடியிருப்புகள், தொழிற்சாலைகளுக்காக ஆக்கிரமிப்பு செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் இயற்கையின் கொடையான சதுப்பு நிலங்கள் பாழாகி வருகின்றன.

இந்நிலமானது சூழல் கலாசார அடிப்படையிலும் பொருளாதாரத் துறையிலும் முக்கியத்துவமாகின்றது. இந்நிலத்தோடு தொடர்புடைய வரலாறு மனித நாகரிகத்தின் ஆரம்பத்தோடு பிணைந்துள்ளதெனலாம்.

இந்து நதிப் பள்ளத்தாக்கின் மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகமும் இலங்கையின் மல்வத்து ஓயாவையண்டி உருவான முதற் குடியேற்றமும் ஈர நிலத்தை மையமாகக் கொண்டு உருவானவையாகும்.

ஈர நிலங்களில் நத்தைகள், சேற்று நண்டு, கடல் நண்டு, கடலேரி நண்டு, ஒற்றைக் கவ்விwetland wildlife நண்டு, சிங்கி இறால், பால் இறால், கண்டற்சிப்பி, ரெலஸ் கோபியம் சிப்பி, லிற்றோரிச் சிப்பி, கண்டல் நீலச் சிப்பி, ஊரி, நீர்ப்பல்லி. கண்டற்கொக்கு, வெண்கொக்கு, கடற்புள், ஆக்காட்டிக் கருவி, மீனினங்கள், பாலூட்டிகள், ஈரூடக வாழிகள், ஊர்வன போன்ற உயிரினங்களும், பறவைகளும் சஞ்சாரம் செய்கின்றன.

அவ்வகையில் கொழும்பு நகரின் வரலாற்றை நோக்கும் போது சதுப்பு நிலங்களுடன் நெருங்கிய தொடர்புடையதாக காணப்படுகிறது. சதுப்பு நிலங்களைச் சூழ அபிவிருத்தியடைந்துள்ள இந்நகரானது இன்றும் அச்சதுப்பு நிலங்களைச் சார்ந்ததாகவே உள்ளது. அதேநேரம் அச்சதுப்பு நிலங்கள் தரங் குறைந்த நிலையிலும் அழியும் தருவாயிலும் உள்ளன. பல்வேறு சட்ட திட்டங்கள், அரச நிறுவனங்களின் பங்களிப்பு இருந்த போதிலும் இன்று அதன் தரக்குறைவுக்கும் அழிவுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாநகர பிரதேசத்தில் இவ்வாறு சதுப்புநிலக்காடுகள் அழிக்கப்பட்டும் தரம்WWD 3 குறைந்தும் வருவதனால் வனவிலங்குகளும் பல்லுயிர்களும் அழிந்து போகும் எதிர்நோக்கியிருப்பது மட்டுமல்லாது நகரின் சமூக பொருளாதாரம் நம்பியுள்ள இயற்கை மூலதனமும் பாதிப்படைகிறது.

கடந்த 1980 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இருந்த இந்நகரின் சதுப்பு நிலப்பிரதேங்களில் 60 வீதமானவை அழிந்துள்ளன. இவ்வழிவானது வருடத்துக்கு ஒரு வீதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எவ்வாறாயிருப்பினும் இந்த இழப்பானது வெறுமனே ஒரு இழப்பு என்று கருத முடியாது. அதேவேளை, இழப்பும் மீள்நிரப்பலும் தவிர்க்க முடியாதாயிருக்கலாம்.

மாசடைதல், குப்பைகளை போடுதல் மற்றும் கழிவு நீர் கலத்தல், அத்துமீறி திட்டமிப்படாத குடியிருப்புக்களை அமைத்தல், கடல்நீர் ஊடுருவுதல், அந்நிய நுண்ணுயிர்கள் மற்றும் அதிகரிக்கும் குடியிருப்புக்கள், சதுப்பு நிலங்கள் பாதிப்படைய காரணமாயிருப்பதுடன் அதுவே மனித சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவதாகவும் அமைகிறது. இப்பாதிப்புக்களும் அச்சுறுத்தல்களும் காலநிலை மாற்றம் தீவிரமடைய காரணமாயிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று கொழுப்பு மாநகரானது 19 கிலேமீற்றர் சதுப்பு நிலக்காடுகளைக் சூழ்ந்த்தாக அமைந்துள்ளது. திறந்த நீர்நிலைகள், குளங்கள், ஓடைகள் என்பன காணப்படுகின்றன. சதுப்பு நிலக்காடுகள்,  அவற்றுக்கே உரிய மற்றும் அந்நிய உயிரினங்கள் ஆட்சி காணப்படுகிறது. மேலும் கைவிடப்பட்ட வயல்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் மருத்துவ தாவரங்கள் உட்பட பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன.

கொழும்பு மாநகர சுற்றுப்புற சதுப்பு நிலங்களில் 85 வீதம் மழை நீரினால் பெறப்படும் நன்னீரின் ஆதிக்கமே காணப்படுகிறது. கொழும்பு நகரைச் சூழவுள்ள தரம் குறைந்த சதுப்பு நிலங்கள் உட்பட அனைத்தும் ஏதோவொரு வகையில் மனித நலனுக்கேற்ற வகையில் பயனுள்ளதாக அமைகிறது. இவற்றால் பெறப்படும் 90 வீதமான நலன்கள் கொழும்பு மாநகருக்கே கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் என்னவென்றால் அதிக நீர்வீழ்ச்சியின் போது பெறப்படும் நீரை உள்வாங்கி வௌ்ளம் வராமல் தடுக்கிறது. வௌ்ளத்தடுப்பைத் தவிர மேலும் பல முக்கியமான பல நன்மைகள் சதுப்பு நிலத்தில் கிடைக்கின்றன.

வயல் மற்றும் ஏனைய விவசாய நிலங்களினூடாக உணவு உற்பத்தி செய்தல், வடிகாலமைப்பு அல்லது வீட்டுப்பாவனைக்கான கிணறுகளுக்கு நன்னீரை வழங்கல், அழகிய மற்றும் மருத்துவ தாவரங்களை வளர்த்தல், உள்ளக காற்றின் வெப்பநிலையை கட்டுப்படுத்துதல், பூச்சிகளை கட்டுப்படுத்தல், வீட்டுத்தோட்டங்களின் மகரந்த சேர்க்கைக்கு துணை புரிதல், உலக வெப்பநிலை சீர்ப்பாட்டுக்கான காபனை சேமித்தல் மற்றும் பிரித்தல் பணியை செவ்வனே செய்தல், பொழுதுபோக்கு மற்றும் கல்வி வாய்ப்புகளை வழங்குதல், சப்பிரதாயபூர்வமான நம்பிக்கைகள், ஆன்மீக மற்றும் கலாசார விடயங்களுக்கு பங்களிப்பு வழங்கல் என்பற்றுடன் கூடிய உல்லாசத்துறைசார் நன்மைகள் என்பன இவற்றுள் உள்ளடங்குகின்றன.

இச்சதுப்பு நிலங்களாவன பல்வேறு மனித செயற்பாடுகள் காரணமாக அதன் தரத்தை இழக்கிறது. இவ்வாறு சதுப்பு நிலங்கள் தரமிழப்பதால் அவற்றில் இருந்து கிடைக்கும் நன்மைகளும் படிப்படியாக குறைந்து வருகிறது.