உலக நுளம்பு ஒழிப்பு தினம்

Kesariat year ago

கடந்த 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி சர் ரெனால்ட் ரோஸ் என்ற விஞ்ஞானி பெண் கொசுக்கள் மனிதனின் இரத்தத்தைக் குடித்து மலேரியாவைப் பரப்புகிறது என்றும் ஜே.இ. (ஜப்பான் என்சப்பாலிட்டிஸ்)  என்ற கொசு ஜப்பானிய மூளைக் காய்ச்சலைப் பரப்புகிறது என்று கண்டறிந்தார். அவர் கண்டுபிடித்த நாளே வருடா வருடம் உலக கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

பெண் கொசுக்கள் இரத்தம் குடிக்கும் என்றால் ஆண் கொசுக்கள் என்ன பண்ணும் தெரியுமா? ஆண் கொசுக்கள் மலர்களில் இருந்து தனது உணவைப் பெற்றுக் கொள்ளும் திறன் வாய்ந்தவை.

யானைக்கால் வியாதிக்கு மருந்து இருக்கிறதா?

யானைக்கால் வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கடற்கரைப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கியூலெக்ஸ் கொசுக்களால் ‘பைலேரியா’ எனப்படும் யானைக்கால் வியாதி உருவாகிறது. இவ்வகைக் கொசுக்கள் இரவில்தான் கடிக்கும். இவை சாக்கடை, வயல்வெளி போன்ற இடங்களில் இனப்பெருக்கம் செய்யும்.