பொலிவூட் நடிகை ஜாக்குலினை ஏன் இன்னும் கைது செய்யவில்லை: புதுடில்லி நீதிமன்றம் கேள்வி

Amuthuat month's ago

200 கோடி  இந்திய ரூபா   பணமோசடி வழக்கில் பொலிவூட் நடிகை ஜாக்குலினை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று புதுடில்லி நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

பெர்னாண்டஸ் தாக்கல் செய்த பிணை கோரிய மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே நீதிமன்றம் இந்த கேள்வியை காவல்துறையினரிடம் கேட்டது.
இதன்போது ஜாக்குலினின் பிணை மனுவை ஆட்சேபித்த அரச தரப்பு, அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறியது. 

இதனையடுத்து நடிகையின் பிணை கோரிய மனு மீதான தீர்மானத்துக்காக விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது நடிகை ஜாக்குலின் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இதேவேளை வழக்கின் முக்கிய குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மி மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் தலைவர்களுக்கு பணம் வழங்கியதாக சுமத்தியுள்ள குற்றச்சாட்டால், தற்போது இந்த வழக்கு அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக மாறியுள்ளது.