ருத்ர தாண்டவம் படம் ரிலீஸ் எப்போது?

Prabhaat day's ago

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள அவரது இரண்டாவது படமான ருத்ர தாண்டவம் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

திரௌபதி இயக்குனர் மோகன் ஜி எழுதி இயக்கியுள்ள இரண்டாவது படம் “ருத்ர தாண்டவம்”. இந்த படத்தில் திரௌபதியில் நடித்த ரிச்சர்டே நாயகனாக நடித்துள்ளார். வில்லன் கதாப்பாத்திரத்தில் இயக்குனர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இந்த படத்தில் ட்ரெய்லர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என இயக்குனர் மோகன்ஜி தெரிவித்துள்ளார். மேலும் படம் ரிலீஸ் திகதி எப்போது என்பதை நாளை அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்