விக்னேஷ் சிவன் அஜித் படத்திலிருந்து விலகியதற்கான காரணம் என்ன என்று இயக்குனர் தரப்பில் இருந்து வெளியாகி உள்ள செய்தி

#Cinema #Tamil-Cinema #Lanka4
kaniat month ago

அஜித் துணிவு படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்போது விக்னேஷ் சிவன் இந்த படத்தில் தூக்கப்பட்டதாகவும் அதற்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஒரு தரப்பில் இருந்து விக்னேஷ் சிவன் கதை அஜித் மற்றும் லைக்காவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து ஏகே62 படத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை சொல்லி உள்ளனர். அதாவது அஜித் விக்னேஷ் சிவனை வேண்டாம் என்ற சொல்லவில்லையாம்.

விக்னேஷ் சிவன் எழுதியுள்ள கதையும் பிரம்மாண்டமாக இருக்கிறது, அதேபோல் பட்ஜெட்டும் பெரிய அளவில் உள்ளதால் இதற்கான கால்ஷீட் அதிகம் தேவைப்படும். ஆனால் இப்போது அஜித் தீபாவளி ரிலீஸுகாக படத்தை தயார் செய்ய சொல்லி இருந்தாராம். ஆகையால் அதற்குள் நான் ஒரு சின்ன படத்தை முடித்து விடுகிறேன்.

அதன் பிறகு அடுத்த படத்தில் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்த படம் பண்ணலாம் என விக்னேஷ் சிவனிடம் அஜித் கூறியதாக அவரது மேனேஜர் மூலம் அனைவரிடமும் கூறிவருகிறார். இவ்வாறு கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதது போல விக்னேஷ் சிவன் தரப்பு பேசி வருகிறார்கள்.

ஏனென்றால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரின் படத்தில் இருந்து தூக்கப்பட்டால் அது மிகப் பெரிய சருக்களை ஏற்படுத்தும். ஆகையால் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு உருட்டை விக்னேஷ் சிவன் உருட்டி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும் இந்த சம்பவத்தின் மூலம் எதிர்காலத்தில் பிரச்சனை வரக்கூடாது என்ற பயத்திலும் இவ்வாறு பொய் சொல்லி வருகிறார் என அவரது சுற்று வட்டாரத்தில் கூறப்படுகிறது. அஜித்தை நம்பி விக்னேஷ் சிவன் மற்ற கதையை தயார் செய்யாமல் இருந்துள்ளாராம். ஆகையால் இப்போது அடுத்ததாக என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து வருகிறாராம்.