ஆணைக்குழுவின் கடமைகளை அரசியல் தொடர்புகள் இன்றி சுயாதீனமாகச் செய்வோம்: ஜானக ரத்நாயக்க

#Sri Lanka #Sri Lanka President #Power #Power station #power cuts
Amuthuat month ago

ஆணைக்குழுவின் கடமைகளை அரசியல் தொடர்புகள் இன்றி சுயாதீனமாகச் செய்ய விரும்புகிறேன். அதற்கு, ஆணைக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் ஆதரவு எனக்கு கிடைக்கின்றது என என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

சுயாதீன ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் இன்று (30) முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய அவர், சுயாதீன ஆணைக்குழுவின் வகிபாகம் சுயாதீனமாக செயற்படுவதே தவிர அரசியல் அதிகாரத்தின் தீர்மானங்களை அமுல்படுத்துவதல்ல. அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கோட்டாபய ராஜபக்சவிடம் தானே தலைமை பதவியை கேட்டதாக கூறியது தெரியாத கதை என அவர் தெரிவித்திருந்தார்.


“இதுபோன்ற சுயாதீன ஆணைக்குழுக்கள் வழங்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாதது ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும். அதன்படி இன்று முதல் இதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இதை நிர்வகிக்காமல், அவர் விரும்பிய அமைச்சரவை முடிவை எங்களை எடுக்க வைப்பதற்காக அநியாயமாக மின்கட்டணத்தை திருத்தம் செய்து பொதுமக்களின் பணத்தைப் பெறுவதற்காக இவ்வாறு செய்கிறார். இதல்லாது அமைச்சர் மாணவர்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டிய அக்கறையில் கதைக்கவில்லை..

அமைச்சரின் மொழியில் சொல்வதென்றால் எங்களைச் சுவரில் தள்ளப் பார்க்கிறார்கள். அது சரியில்லை.

நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. அவரைப் போல நான் யானை வாலில் தொங்கும் ஆள் இல்லை. எனவே, ஆணைக்குழுவின் கடமைகளை அரசியல் தொடர்புகள் இன்றி சுயாதீனமாகச் செய்ய விரும்புகிறேன். அதற்கு, ஆணைக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் ஆதரவு எனக்கு கிடைக்கின்றது. ஏனென்றால் படித்தவர்களும் அறிவாளிகளும் இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது. ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் அழுத்தம் இருக்கும். ஆனால் பின்னர் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.

மின்சார வாரியம் பற்றி அமைச்சர் தரவுகள் இல்லாமல் பேசுகிறார். தரவுகளின் அடிப்படையில் பேசுகிறோம். இது அறிவியல் பூர்வமாக செய்யப்பட வேண்டும். இது அரசியல் அதிகாரத்தின் தன்னிச்சையான செயல்முறையைப் பயன்படுத்தி குழந்தைகளின் உரிமைகளை மீறுவது மற்றும் அதை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் விட்டுவிடுவது பற்றியது. 30-60 யுனிட் பயன்படுத்தும் பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் மக்களிடம் 100 பில்லியன் எடுக்கப் போகிறார். இது நியாயமற்ற செயலாகும். நாங்கள் நியாயமான முறையில் கணக்கிட்ட பிரேரணையை முன்னெடுப்போம். இதை இலங்கை மின்சார சபைக்கு நாங்கள் கோரியபடி கொடுக்க மாட்டோம் என தெரிவித்தார்.

இதனை முறையாக நிர்வகிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளன. அந்த வாய்ப்பை இவர்கள் தருவதில்லை. அனைத்திலும் அரசியல் தலையீடுகள் செய்யப்படுகின்றன.

தனியார் வங்கி ஒன்றின் தலைவர் பதவிக்கு நான் செல்வதற்கு கோத்தபாய ராஜபக்ஷவிடம் உதவி கோரியதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார். அது பொய்யானது. எனக்கு ஆணைக்குழுவினை கையளிக்கும் போது, ​​ஒரு நிபந்தனையை இட்டே தந்தார்கள். அந்த நிபந்தனையை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவால் தொட முடியாது. அதை மாற்ற முடியாது என்ற நிபந்தனை எழுத்துமூலமாக உள்ளது.

அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. வாட்ஸ்அப் விவாதங்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக என்னிடம் உள்ளது. எனவே யார் சொல்வதையும் ஏற்காதீர்கள். இவை நகைச்சுவைகள். அதனால் தான் தெரியாத வங்கி பற்றி பேசுகிறார். தெரியாத விஷயங்கள் மின்சாரம் போன்றவை, வங்கிகள் பற்றி தெரியாது, நிதி பற்றி தெரியாது, டெபிட் மற்றும் கிரெடிட் பற்றி தெரியாது. எதுவும் தெரியாத ஒரு அமைச்சரை நியமிக்கும்போது, ​​அந்த சிஸ்டம் முற்றாக அழிந்துவிடும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.