டெங்கு அனர்த்தம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

Prabhaat month ago

பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்கு உட்டபட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எஸ். அகிலன் தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்று காரணமாக பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளதால் அப்பிரதேசத்தில் டெங்கு நுளம்பு அதிகமாக பரவக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதால் பொது மக்கள் அவதானமாக செயற்பட்டு குறித்த இடங்களை டெங்கு துளம்புகள் அற்ற இடங்களாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எஸ். அகிலன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒலுவில், அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை ஆகிய பிரதேசங்கள் அதிகமாக டெங்கு நோய் பரவக் கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்கள் காணப்படுமாயின் 2 வார காலத்திற்குள் துப்பரவு செய்ய வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.