மத்திய வெளியுறவுத்துறை புதிய செயலாளர் வினய் மோகன் குவத்ரா பதவிக்காலம் மேலும் 16 மாதத்துக்கு நீட்டிப்பு

Keerthiat month's ago

மத்திய வெளியுறவுத்துறை புதிய செயலாளராக வினய் மோகன் குவத்ரா கடந்த மே மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவி காலம் அடுத்த மாதம் 31ம் திகதியுடன் நிறைவடைகிறது. 

இந்நிலையில், வினய் மோகன் குவத்ரா பதவிக்காலத்தை மேலும் 16 மாதத்துக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் 2024 ஏப்ரல் 30-ம் திகதி வரை குவாத்ரா பணியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளியுறவுத்துறை விவகாரங்களில் நீண்டகால அனுபவம் பெற்றவரான வினய் மோகன் குவாத்ரா, நேபாளத்துக்கான தலைமை தூதராக பணியாற்றி வந்தார். 

வினய் மோகன் குவாத்ரா கடந்த 1988-ம் ஆண்டில் வெளியுறவுத் துறை பணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.