தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்த இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!

Prabhaat day's ago

ஆப்கான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடும் தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்த இந்தியாவின் உதவியை அமெரிக்கா கோரியுள்ளது.

குறித்த தீவிரவாதிகள் மீது ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்துவதற்கு இந்தியாவின் விமானப்படை தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் ஆப்கான் விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தலிபான்களுக்கும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து வான்வழி தாக்குதல்களை நடத்தும்  வாய்ப்புகளை அமெரிக்கா, ஆராய்ந்து வருகிறது.

பழைய விமானங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையால் இந்தியாவின் உதவியை கோருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.