எதிர்பாராத பண வரவால் மகிழ்ச்சி அடையப்போகும் இரு ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasuat day's ago

மேஷம்
அசுவினி : தொழிலை விருத்தி செய்ய நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும்.
பரணி : பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
கார்த்திகை 1 : புதிய முயற்சி பலன் தரும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : மதியம் வரை உங்கள் முயற்சி இழுபறியாகும். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும்.
ரோகிணி : திட்டமிட்டு செயல்படுவீர்கள். மதியம் வரை இருந்து வந்த நெருக்கடி விலகும்.
மிருகசீரிடம் 1, 2 : தடைகளைத் தாண்டி தொழிலில் லாபம் காண்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: மதியத்திற்கு மேல் உங்கள் முயற்சியில் பின்னடைவு ஏற்படும். இனம்புரியாத குழப்பம் ஏற்படும்.
திருவாதிரை : கவனமாக செயல்பட வேண்டிய நாள். எந்தவொரு செயலிலும் அவசரம் வேண்டாம்.
புனர்பூசம் 1, 2, 3: புதிய முயற்சி இழுபறியாகும். மனக்குழப்பம் அதிகமாகி குறையும்.

கடகம்
புனர்பூசம் 4 : நண்பர்கள் ஆதரவுடன் நேற்றைய பிரச்னை ஒன்றிற்கு தீர்வு காண்பீர்கள்.
பூசம் : உறவினர் ஒருவரிடம் ஏற்பட்ட பிரச்னையை பேசி தீர்ப்பீர்கள். நிம்மதியான நாள்.
ஆயில்யம் : வாழ்க்கைத் துணையின் வழிகாட்டுதலால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.

சிம்மம்
மகம் : துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பகைவர்கள் விலகுவர்.
பூரம் : உடல் நிலையில் இருந்து வந்த சங்கடம் விலகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
உத்திரம் 1: உங்கள் தொழிலில் இருந்து வந்த சிறு சிறு தடை விலகும். எதிர்பார்த்த லாபம் வரும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : உங்கள் முயற்சியில் தடைகளை சந்தித்தாலும் போராடி வெல்வீர்கள். நிதிநிலை உயரும்.
அஸ்தம் : விலகிச்சென்ற உறவினர் விரும்பி வருவர். உங்கள் செல்வாக்கு உயரும்.
சித்திரை 1, 2: கையை விட்டுப் போன பணி மீண்டும் உங்களிடம் வந்து சேரும். தெய்வ அருள் கிட்டும்.

துலாம்
சித்திரை 3, 4 : உங்கள் தேவைகளில் ஒன்று நிறைவேறும்.நண்பர்களிடம் விழிப்புணர்வு அவசியம்.
சுவாதி : செலவு அதிகரிக்கும். அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கை தேவை.
விசாகம் 1, 2, 3 : குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வீர்கள்

விருச்சிகம்
விசாகம் 4 : வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பெரியோரின் ஆசி உண்டு.
அனுஷம் : சுபச்செலவு அதிகரிக்கும். ஒருசிலர் புதிய தொழிலுக்கான முயற்சியை மேற்கொள்வர்.
கேட்டை : உங்கள் திறமை வெளிப்படும். சகோதரர் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்

தனுசு
மூலம் : குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூராடம்: மனதில் இருந்து வந்த குழப்பம் விலகும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பீர்.
உத்திராடம் 1 : செயல்களில் லாபம் காண்பீர்கள். புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: நேற்றைய செயல் ஒன்றில் சங்கடம் தோன்றும். செலவு அதிகரிக்கும்.
திருவோணம் : உங்கள் மனதில் தடுமாற்றம் ஏற்பட்டு செயல்கள் தள்ளிப் போகும் நாள்.
அவிட்டம் 1, 2 : திட்டமிட்ட செயல்களில் கூட லாபத்தை காண முடியாமல் போகும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : முயற்சி ஒன்று வெற்றியாகும். உங்கள் நிதிநிலை உயரும்நாள்.
சதயம் : பழைய முதலீட்டில் இருந்து வந்த லாபம் உண்டாகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
பூரட்டாதி 1, 2, 3: குடும்பத்தில் இருந்து வந்த சங்கடம் விலகும். மதியத்திற்கு மேல் செயல்களில் கவனம் தேவை.

மீனம்
பூரட்டாதி 4 : உங்கள் எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
உத்திரட்டாதி : உத்தியோகத்தில் உண்டான நெருக்கடி இன்று சரியாகும். உங்களை மற்றவர் பாராட்டுவர்.
ரேவதி : நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். புதிய இடம் வாங்குவதில் முன்னேற்றம் காண்பீர்கள்.