இராணுவகப் வாகனத்தில் மோதுண்டு இரு பொலிஸ் அதிகாரிகள் படுகாயம்!

#Sri Lanka #Accident #Police
Yugaat day's ago

அநுராதபுரம் - புத்தளம் பிரதான வீதி, நொச்சியாகம லிந்தவௌ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில், இரு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விசேட சுற்றிவளைப்பொன்றுக்காக மோட்டார் சைக்கிளில் சென்ற நொச்சியாகம பொலிஸ் அதிகாரிகள் இருவரே இராணுவ கப் ரக வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

நொச்சியாகம பொலிஸ் நிலையத்தின் விசேட சுற்றிவளைப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியான ஆர்.எம்.எஸ்.சி.ரத்னாயக்க மற்றும் பொலிஸ் அதிகாரியான சுஜிவ சந்தன சுசில் குமார ஆகிய இருவருமே விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

கலாஓயா இராணுவ முகாமுக்குச் சொந்தமான கப் ராக வாகனத்தில் மோதுண்டே குறித்த பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்.

கப் வாகனத்தைச் செலுத்தி வந்த இராணுவச் சிப்பாயைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.