துருக்கி நிலநடுக்கம்: காணாமல் போய் தேடப்பட்டு வந்த கால்பந்து நட்சத்திரம் இடிபாடுகளுக்குள் சிக்கி மீட்பு

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின்னர் காணாமல் போய் தேடப்பட்டு வந்த கானா கால்பந்து நட்சத்திரம் Christian Atsu (31 வயது) கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இதுவரை 4,300 க்கும் மேற்பட்டவர்களின் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15,000 பேர் காயம் அடைந்தனர்.
பலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பல்வேறு நாடுகளிருந்தும் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
இந்த பேரழிவால் துருக்கி, சிரியா நாடுகள் மிரண்டு போய் உள்ளன. இதையடுத்து உலகின் பல்வேறு நாடுகளும் இந்த இரு நாடுகளுக்கும் உதவிகளை அறிவித்துள்ளன.

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..