வீட்டிலே முட்டை, கோழி பிரைட் ரைஸ் சமைத்துப் பாருங்கள். பிரமாதம்...| Egg Chicken Fried Rice Recipe !
#Cooking #Chicken #Egg
at month's ago

Advertisment
தேவையான பொருட்கள் :
- வெங்காயம் – 3 /4 கப்
- எண்ணெய் – 2 1 /2 மேசைக் கரண்டி
- முட்டை – 2
- சோயா சாஸ் – கால் தேக்கரண்டி
- நல்லெண்ணெய் – கால் தேக்கரண்டி
- சிக்கன் எலும்பில்லாதது – 400 கிராம்
- கேரட் – 2
- பட்டாணி – அரை கப்
- வெங்காயத் தாள் – சிறிதளவு
- பாஸ்மதி அரிசி – 2 கப்
செய்முறை :
- அரிசியைக் கழுவி கடாயில் லேசாக, அரிசியின் ஈரப்பதம் வற்றும் வரை வறுத்து 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, ஆற வைத்துக் கொள்ளவும்.
- குறைந்தது 4 – 6 மணி நேரம் வரை ஆற வைத்துக் கொள்ளவும்.
- சிக்கனை எலும்பு இல்லாமல் பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
- கேரட், வெங்காயத் தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி லேசாக அடித்துக் கொள்ளவும்.
- கடாயில் 1 மேசைக் கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிரவுன் கலராகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- வதக்கிய வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- முட்டையுடன் நல்லெண்ணெய் மற்றும் சோயா சாஸ் கலந்து வைத்துக் கொள்ளவும்.
- கலந்து வைத்துள்ள முட்டையைக் கடாயில் ஊற்றி லேசாக வதக்கி (முட்டை பொரியலுக்கு செய்வது போல) எடுத்துக் கொள்ளவும்.
- கடாயில் 1 மேசைக் கரண்டி எண்ணெய் ஊற்றி, வேக வைத்துள்ள சிக்கன், கேரட், பட்டாணி
- மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும் .
- இதனுடன் வேக வைத்து வைத்துள்ள சாதம், வெங்காயத் தாள் பொடியாக நறுக்கியது அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
- இதனுடன் 2 மேசைக் கரண்டி சோயா சாஸ் மற்றும் பொரித்து வைத்துள்ள முட்டை சேர்த்துக் கலந்து 1 நிமிடம் வதக்கிப் பரிமாறவும். எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் ரெடி.
Advertisment
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..