சுவையான கருவாடு வதக்கல் சமைத்துப் பாருங்கள்.

#Cooking #Fish #curry
Kesariat month's ago

தேவையான பொருட்கள் :

 • வஞ்சிர மீன் கருவாடு - 250 கிராம்
 • சின்ன வெங்காயம் - 200 கிராம்
 • நல்லெண்ணெய் - 50 மில்லி லிட்டர்      
 • மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
 • மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
 • கடுகு - 1 தேக்கரண்டி
 • கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
 • பச்சை மிளகாய் - 6
 • சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
 • உப்பு -  தேவையான அளவு 

செய்முறை : 

 1. கருவாடை துண்டுகளாக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாகவும், பச்சை மிளகாயை வட்ட வடிவமாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
 2. வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். 
 3. சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டுக் கிளறி விடவும்.
 4. அனைத்தும் நன்றாக வதங்கியதும் கருவாடு துண்டுகளைப் போட்டு, மெதுவாகப் புரட்டி, கிளறி இறக்கி பரிமாறவும்.
 5. கருவாடில் உப்பு இருப்பதால் தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்கவும்.