இன்றைய வேத வசனம் 06.01.2023:பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்இ கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்

#Bible
Pratheesat month's ago

ஒரு முறை ஒரு தாயார், பில்லிகிரகாமிடம் தன் இரண்டு சிறு குழந்தைகளோடு வந்தார்கள்.  "ஐயா, எனக்கு மிஷனெரி ஊழியம் செய்ய ஆவலாயிருக்கிறது.

என் இரண்டு குழந்தைகளையும் விட்டு, விட்டு தூர இடத்திற்கு மிஷனெரியாக செல்ல விரும்புகிறேன். உங்கள் ஆலோசனை என்ன?'' என்று கேட்டார்கள்.

பில்லிகிரகாம் சொன்னார், "அம்மா, திருமணமாகி, தாயாகி விட்டபின் செய்யும் வல்லமையான மிஷனெரி பணி, தன் வீட்டில் அமர்ந்து, பிள்ளைகளை தேவபக்தியில் வளர்ப்பதுதான்.

உங்கள் வீட்டையே மிஷனெரி தளமாகவும், உங்கள் முழங்கால்களையே சுவிசேஷ ஆயுதமாகவும் பயன்படுத்துங்கள். கர்த்தர் உங்களுக்கு மேன்மையான தாய்மையின் பொறுப்பைத் தந்துள்ளார். அதை சிறந்த முறையில் நிறைவேற்றி முடிப்பதைப் பார்க்கிலும், வேறு மேன்மையான மிஷனெரி அழைப்பு ஒன்றுமில்லை.

வீட்டில் உங்கள் பொறுப்புகளை முடித்துவிட்டு, மீதி நேரங்களில், உங்கள் பகுதியில் இருக்கிற கிறிஸ்துவை அறியாத மக்கள் மத்தியில் நீங்கள் உற்சாகமாய் ஊழியம் செய்யலாம்.

உங்கள் சபையில், ஆலயத்தில் உங்கள் பணி தேவைப்படலாம். உண்மையான மிஷனெரிப் பணி உங்கள் வீட்டில் ஆரம்பித்து, அண்டை அயலாரிடம் பரவட்டும்" என்றார்.

ஆம், உங்கள் ஜெபத்தில் அநேக ஊழியர்களைத் தாங்குங்கள். கண்ணுக் கெட்டாத தூரத்திலுள்ள அநேக நாடுகளுக்கு உங்கள் செய்திகளுடன் தேவதூதர்களை அனுப்புங்கள். உங்கள் பிள்ளைகளை கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்து, ஊழியக்காரர்களாக வளர்த்து கர்த்தருக்கு அர்ப்பணியுங்கள்.
"இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்" (#சங்கீதம் 127:4)

ஆமென்!! அல்லேலூயா!!!