அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 28.09.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasuat month's ago

மேஷம்
அசுவினி: திட்டமிட்டிருந்த செயல்களை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்.
பரணி: நண்பர் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வரவு அதிகரிக்கும்.
கார்த்திகை 1: தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் அணுகுமுறையால் நன்மை அதிகரிக்கும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: எதிர்ப்பை சரிசெய்து உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
ரோகிணி: விஐபிகள் உதவியுடன் எண்ணத்தை நிறைவேற்றி ஆதாயம் அடைவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: எதிரிகள் பணிவார்கள். தடைபட்ட வருவாய் வந்து சேரும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: குடும்பத் தேவையை நிறைவேற்றுவீர்கள். முயற்சி வெற்றியாகும். லாபம் கூடும்.
திருவாதிரை: எதிர்பாராத வருவாய் ஏற்படும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3: இழுபறியாக இருந்த ஒரு முயற்சி இன்று நடந்தேறும்.

கடகம்
புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் விருப்பம் இன்று நிறைவேறும்.
பூசம்: மாற்று இனத்தவர் உதவியுடன் தொழிலை விரிவுசெய்வீர்கள். பொன் பொருள் சேரும்.
ஆயில்யம்: விழிப்புடன் செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும். விரயம் கட்டுப்படும்

சிம்மம்
மகம்: அதிகாரிகள் ஆதரவுடன் பணியில் நீங்கள் விரும்பிய மாற்றத்தை அடைவீர்கள்.
பூரம்: பணவரவு திருப்தி தரும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். லாபகரமான நாள்.
உத்திரம் 1: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர்கள். விருப்பம் நிறைவேறும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: கருத்து வேறுபாட்டால் விலகியவர்கள் உங்களைத் தேடி வருவர்.
அஸ்தம்: திட்டமிட்ட செயல் நிறைவேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
சித்திரை 1, 2: தம்பதியர் ஒற்றுமை உண்டாகும். எண்ணம் நிறைவேறும். சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும்.

துலாம்
சித்திரை 3, 4: மனம் மகிழும்படியான சம்பவம் நடைபெறும். குலதெய்வ அருளால் எண்ணம் நிறைவேறும்.
சுவாதி: குடும்பத் தேவை அறிந்து செயல்படுவீர்கள். தொழிலில் ஆதாயம் பெருகும்.
விசாகம் 1, 2, 3: குழப்பத்திற்கு இடம் தராமல் செயல்பட வேண்டிய நாள். முயற்சி நன்மையாகும்.

விருச்சிகம்
விசாகம் 4: வெளியூர் பயணம் வெற்றி தரும். ஆதாயம் காண்பீர்கள்.
அனுஷம்: பணியாளர்கள் வேறு இடத்திற்கு மாறுதல் கேட்பீர்கள். விருப்பம் நிறைவேறும்.
கேட்டை: அலைச்சல், செலவு அதிகரிக்கும் என்றாலும் முயற்சியில் ஆதாயம் உண்டாகும்.

தனுசு
மூலம்: வியாபார முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சி லாபமாகும். வருவாய் கூடும்.
பூராடம்: நிதி நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் இன்று வந்து சேரும்.
உத்திராடம் 1: நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். பொன் பொருள் சேரும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பகைவர்கள் விலகிச் செல்வர்.
திருவோணம்: பொறாமையாளர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு விமர்சனம் செய்தாலும் பொருட்படுத்தாதீர்.
அவிட்டம் 1, 2: ஆரோக்கியம் சீராகும். துணிவுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: இரண்டு நாளாக இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.
சதயம்: புதிய முயற்சிகள் நன்மையாகும். உடல்நிலையில் கவனம் தேவை.
பூரட்டாதி 1, 2, 3: குடும்பத்தினர் ஆதரவுடன் சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4: செயலில் சங்கடத்தை சந்திப்பீர்கள். சந்திராஷ்டமம் என்பதால் அமைதியைக் கடைபிடியுங்கள்.
உத்திரட்டாதி: கடவுளை நம்பி செயல்பட வேண்டிய நாள். மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாகலாம்.
ரேவதி: செயல்களில் தடை, தாமதம் ஏற்படும். கவனக்குறைவுக்கு இடம் தராதீர்கள்.