அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 02.12.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasuat month's ago

மேஷம்
அசுவினி: குடும்பத்தினர் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும்.
பரணி: உறவினருக்காக அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் சிறிய பிரச்னை உண்டாகும்.
கார்த்திகை 1: பணத்தைக் கையாளுவதில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் எதுவும் இன்று வேண்டாம்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: எதிர்பார்த்த வரவு உண்டு. உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரோகிணி: குடும்பத்தினர் வழியே ஆதாயம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.
மிருகசீரிடம் 1, 2: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த செய்தி வரும். புதிய தொழில் தொடங்குவது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.
திருவாதிரை: அந்நிய இனத்தினர் உதவியுடன் நீண்ட நாள் பிரச்னை ஒன்றில் தீர்வு காண்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: பெற்றோர் வழியே வரவுகள் ஏற்படும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.

கடகம்
புனர்பூசம் 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
பூசம்: குழப்பங்கள் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
ஆயில்யம்: சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். குல தெய்வ அருளால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.

சிம்மம்
மகம்: செயல்களில் இழுபறி உண்டாகும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் தடுமாற்றம் அடைவீர்கள்.
பூரம்: பகைவர்களின் கை மேலோங்கும். உங்களது முயற்சிகளில் தடைகள் உண்டாகும்.
உத்திரம் 1: பயணத்தில் எச்சரிக்கை அவசியம். வாகனத்தின் மூலம் செலவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
அஸ்தம்: தம்பதி இடையே ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சி காண்பீர்கள்
சித்திரை 1, 2: எதிர்பாலினர் ஆதரவுடன் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4: உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகி உற்சாகமுடன் செயல்படுவீர்கள்.
சுவாதி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.
விசாகம் 1, 2, 3: தடைகளை நீக்கி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.

விருச்சிகம்
விசாகம் 4: பிள்ளைகள் நிலையில் உயர்வு தோன்றும். பூர்வீக சொத்து பற்றிய பேச்சு எழும்.
அனுஷம்: திருமண வயதில் இருப்பவர்களுக்கு உறவினர்கள் வழியே நல்ல செய்தி வரும்.
கேட்டை: பெற்றோர் ஆதரவுடன் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

தனுசு
மூலம்: தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும்.
பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நீங்கள் விரும்பியதை அடைவீர்கள்.
உத்திராடம் 1: செயல்களில் தடைகளை சந்திப்பீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். யோகமான நாள்.
திருவோணம்: பொதுநலத்துடன் ஒரு பணியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
அவிட்டம் 1, 2: உங்கள் எண்ணத்தை சகோதரர்கள் உதவியுடன் நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். வரவை வைத்து பண நெருக்கடியை சரி செய்வீர்கள்.
சதயம்: தைரியமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்த வரவு உண்டு. தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும்.

மீனம்
பூரட்டாதி 4: புதிய சிந்தனை மேலோங்கும். எதிர்காலம் குறித்த எண்ணத்துடன் ஒரு செயலைத் தொடங்குவீர்கள்.
உத்திரட்டாதி: குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
ரேவதி: தொழில் சம்பந்தமாக வெளியில் சென்று வருவீர்கள். முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.