அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 23.11.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasuat day's ago

மேஷம்
அசுவினி: உங்கள் செயல்களில் மாலை வரை லாபம் காண்பீர்கள். அதன்பின் நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.
பரணி: நீங்கள் நினைத்தபடியே முயற்சியில் நன்மைகள் தோன்றும். மாலையில் சில சங்கடங்கள் தோன்றும்.
கார்த்திகை 1: குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
ரோகிணி: புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும்.
மிருகசீரிடம் 1, 2: நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். பண வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: புதிய முயற்சி ஒன்று நிறைவேறும். அரசு வழியிலான எதிர்பார்ப்பு ஆதாயமாகும்.
திருவாதிரை: வருவாயைக் கொண்டு குடும்ப நிலையை சரி செய்யும் முயற்சிக்கு வருவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: அமைதியாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த வரவு உண்டு.

கடகம்
புனர்பூசம் 4: புதிய திட்டங்கள் தீட்டி செயல்பட ஆரம்பிப்பீர்கள். திருப்பு முனையான நாள்.
பூசம்: எதிர்பார்த்த ஆதாயம் வந்து சேரும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.
ஆயில்யம்: புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். உறவினர்கள் உதவி செய்வர்.

சிம்மம்
மகம்: அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். புதிய முயற்சிகள் வெற்றியாகும்.
பூரம்: தொழிலை விரிவு செய்வீர்கள். உங்கள் அணுகுமுறையால் வருமானம் அதிகரிக்கும்
உத்திரம் 1: எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். பணியிடத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.
அஸ்தம்: பொருளாதார சிந்தனை மேலோங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
சித்திரை 1, 2: உங்கள் செயல் மற்றவர்களால் பாராட்டப்படும். சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4: நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். வரவிற்கு வழி காண்பீர்கள்.
சுவாதி: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய வகையில் செயல்பட்டு மகிழ்வீர்கள்.
விசாகம் 1, 2, 3: குடும்பத்தினர் நலனில் அக்கறை கொள்வீர்கள். வருவாயில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

விருச்சிகம்
விசாகம் 4: பிள்ளைகளின் திருமணத்திற்காக முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அலைச்சல் அதிகரிக்கும்.
அனுஷம்: குடும்ப வகையில் திடீர் செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகள் எதுவும் இன்று வேண்டாம்.
கேட்டை: உங்கள் செயல்கள் ஆதாயம் தரும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

தனுசு
மூலம்: நீங்கள் எதிர்பார்த்த வருவாய் இன்று உங்களைத் தேடி வரும். மகிழ்ச்சி கூடும்.
பூராடம்: உங்கள் முயற்சிகளில் இன்று விவேகம் இருக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள்.
உத்திராடம் 1: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். நட்பு வட்டம் விரிவடையும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக புதிய முயற்சியில் இறங்குவீர்கள்.
திருவோணம்: பழைய முதலீடுகளில் ஆதாய நிலை ஏற்படும். வருவாய் அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2: நீண்ட நாளாக நினைத்திருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: உறவினர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
சதயம்: உங்கள் எண்ணங்களில் ஒன்று நிறைவேறும். நீங்கள் விரும்பியதை அடைந்து மகிழ்வீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: வருமானம் பல வழிகளில் வந்து சேர்ந்தாலும் உங்கள் மனம் இன்று அமைதியை நாடும்.

மீனம்
பூரட்டாதி 4: இன்று மாலை வரை சங்கடங்கள் இருக்கும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
உத்திரட்டாதி: வேலைப் பளுவின் காரணமாக உங்கள் உடலும் மனமும் சோர்வடையும்.
ரேவதி: பணியிடத்தில் உங்கள் மீது சிலர் குற்றம் கூற முயற்சிப்பார்கள். எச்சரிக்கை அவசியம்.