அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 19.11.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasuat day's ago

மேஷம்
அசுவினி: தடைகள் விலகும். செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ப வருமானமும் வரும்.
பரணி: முயற்சி ஆதாயமாகும். சுயஆற்றல் வெளிப்படும். எதிரிகள் பின்வாங்குவார்கள்.
கார்த்திகை 1: அரசுவழி முயற்சி நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் செல்வாக்கை நிரூபிப்பீர்கள்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: வியாபாரத்தில் தடை விலகும். நீங்கள் எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.
ரோகிணி: பணிபுரியும் இடத்தில் சங்கடம் விலகும். உங்கள் அறிவாற்றல் வெளிப்படும்.
மிருகசீரிடம் 1, 2: பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பெற்றோர் ஆதரவாக இருப்பர்.

மிதுனம்
மிருகசீரிடம் 3, 4: அரசுவழி முயற்சியில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வழக்கு சாதகமாகும்.
திருவாதிரை: எதிர்பார்த்தவற்றை அடைவீர்கள். பொருளாதார நெருக்கடி விலகும்.
புனர்பூசம் 1, 2, 3: பணியாளர்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மறைமுக எதிரிகளால் சில சங்கடம் தோன்றும்.

கடகம்
புனர்பூசம் 1, 2, 3: எதிர்பார்த்த அளவிற்கு வரவு வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
பூசம்: நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். அலுவலகத்தில் உயரதிகாரியின் ஆதரவு உண்டாகும்.
ஆயில்யம்: வருமானத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர்கள். நெருக்கடிகள் நீங்கும்.

சிம்மம்
மகம்: பொருள்களைக் கையாள்வதில் எச்சரிக்கை தேவை. உங்கள் வார்த்தைகளின் வழியே நன்மை தோன்றும்.
பூரம்: பொருளாதார நிலை உயரும். பழைய கடனை அடைத்து நிம்மதி காண்பீர்கள்.
உத்திரம் 1: யோசிக்காமல் செயல்பட்டு அதன் வழியே சங்கடத்தை அடைவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: பணியில் இருந்த இழுபறி நிலை மாறும். மகிழும்படியான சூழல் உருவாகும்.
அஸ்தம்: வீட்டினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன்கள் தேடி வரும்.
சித்திரை 1, 2: குலதெய்வ அருளால் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

துலாம்
சித்திரை 3, 4: எதிர்பாராத வகையில் செலவு தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும். மனதில் குழப்பம் வந்து செல்லும்.
சுவாதி: மனம் விரும்பாத சம்பவம் ஒன்று நடக்கும். வாகனப் பயணத்தில் கவனம் தேவை.
விசாகம் 1, 2, 3: மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். செயலில் தடுமாற்றம் உண்டாகும்.

விருச்சிகம்
விசாகம் 4: பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் லாபம் உண்டாகும்.
அனுஷம்: முயற்சியில் சாதகமான நிலை ஏற்படும். மனநிலை உற்சாகமடையும்.
கேட்டை: தொழிலில் லாபம் காண்பீர்கள். எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும்.

தனுசு
மூலம்: வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும். புதிய முயற்சியில் சிலர் ஈடுபடுவர்.
பூராடம்: ஆற்றல் வெளிப்படும். தடைகள் விலகி நினைத்ததை அடைவீர்கள்.
உத்திராடம் 1: நினைத்ததை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: நெருக்கடி விலகும். ஆர்வத்துடன் எதிர்பார்த்த ஒன்று ஆதாயமாகும். நிதிநிலை உயரும்.
திருவோணம்: இரண்டு நாளாக இருந்த சங்கடம் விலகும். செயல்களில் வேகம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். பணவரவால் சந்தோஷமடைவீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: மனதை பாதிக்கும் வகையில் சில சம்பவம் நடைபெறும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
சதயம்: வீண் சங்கடம் தோன்றி உங்களை சோர்வடைய வைக்கும். பயணத்தில் கவனம் தேவை.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்தவற்றில் நன்மை காண முடியாமல் போகும். பிரச்னை ஒன்றை எதிர்கொள்வீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4: உற்சாகமாக செயல்படுவீர்கள். எதிர்பாலினரால் ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பரால் நன்மை ஏற்படும்.
ரேவதி: தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள்.