அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 18.11.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasuat day's ago

மேஷம்
அசுவினி: முயற்சியில் கவனம் தேவை. பிறரிடம் எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம்.
பரணி: செயலில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பில் இழுபறியான நிலை ஏற்படும்.
கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்பட்டு நன்மை காண்பீர்கள். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: வம்பு, வழக்குகளில் எதிர்மறை முடிவு கிடைக்கும். பிறர் பிரச்னையில் தலையிட வேண்டாம்.
ரோகிணி: மகிழ்ச்சியான செயல்களில் ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவால் ஆதாயம் தோன்றும்.
மிருகசீரிடம் 1, 2: பிறரை நம்பி சட்டத்திற்கு புறம்பாக செயல்பட வேண்டாம். அதனால் சங்கடம் உண்டாகும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த வரவு வந்து சேரும். பொருளாதார நெருக்கடி விலகும். பழைய கடன் தீரும்.
திருவாதிரை: புதிய முயற்சியில் ஈடுபட்டு ஆதாயம் காண்பீர்கள். பொருளாதார உயர்வு உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3: நண்பர்கள் துணையுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத வருமானத்தை அடைவீர்கள்.

கடகம்
புனர்பூசம் 1, 2, 3: பண விஷயத்தில் கவனம் தேவை. முயற்சி நிறைவேற கடின உழைப்பு தேவை.
பூசம்: முயற்சியில் தீவிரம் காட்டுவீர்கள். அலைச்சல் வழியே நினைத்ததை சாதிப்பீர்கள்.
ஆயில்யம்: புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

சிம்மம்
மகம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். எதைச் செய்வதென தெரியாமல் திண்டாடுவீர்கள்.
பூரம்: ஆசைகள் அதிகரிக்கும். தவறான வழியில் சம்பாதிக்கும் முயற்சியை தவிர்க்கவும்.
உத்திரம் 1: பழைய எதிரிகள் பலம் பெறுவார்கள். உங்கள் முயற்சிகளில் ஏதேனும் தடை உண்டாகும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: எதிர்பாராத பயணம் ஏற்படும். உங்கள் செயல்கள் பெரும் முயற்சிக்கிடையே நிறைவேறும்.
அஸ்தம்: அவசிய செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள். பணம் பலவழிகளில் செலவாகி இருப்பு கரையும்.
சித்திரை 1, 2: குடும்பத்தினர் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். வருவாய்க்கு மிஞ்சிய செலவு ஏற்படும்.

துலாம்
சித்திரை 3, 4: முயற்சி வெற்றி பெறும். அடிப்படைத் தேவை நிறைவேறும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும்.
சுவாதி: நண்பர்களிடம் கவனம் தேவை. பிறருக்கு செய்யும் உதவி சங்கடத்தை உண்டாக்கும்.
விசாகம் 1, 2, 3: பணவரவில் இருந்த தடை நீங்கும். எதிர்பாராத வரவால் கடன்களை அடைப்பீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். அதிகாரிகளின் பாராட்டிற்கு ஆளாவீர்கள்.
அனுஷம்: தொழிலை மாற்றியமைக்கவோ, விரிவு செய்யவோ முயற்சிப்பீர்கள். லாபம் உண்டாகும்.
கேட்டை: வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.

தனுசு
மூலம்: இருப்பிடத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். எண்ணங்கள் நிறைவேறும்.
பூராடம்: உங்கள் அணுகுமுறையில் மாற்றம் உண்டாகும். எதிரிகள் சரணடைவார்கள்.
உத்திராடம் 1: எதிர்பார்ப்பு நிறைவேறும். உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் ஏற்பார்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: எதிர்பார்த்தவற்றில் தடை, தாமதம் உண்டாகும். மனதில் வீண் குழப்பம் ஏற்படும்.
திருவோணம்: முயற்சிகளில் சிரமங்களைக் காண்பீர்கள். எதிரியால் பிரச்னைகளை சந்திப்பீர்கள்.
அவிட்டம் 1, 2: யோசித்து செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சியில் ஆதாயத்தை எதிர்பார்க்க முடியாமல் போகும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: பழைய பிரச்னைக்கு முடிவு கட்டுவீர்கள். எதிர்பார்த்த வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சதயம்: உறவினரிடம் ஏற்பட்ட பகை விலகும். உங்களை விட்டு விலகியவர்கள் தேடி வருவர்.
பூரட்டாதி 1, 2, 3: திறமை வெளிப்படும். எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள்.

மீனம்
பூரட்டாதி 4: செயல்களில் விவேகம் இருக்கும். உங்களுக்குண்டான பிரச்னைகளை சரி செய்வீர்கள்.
உத்திரட்டாதி: சுறுசுறுப்பாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிரியால் உண்டான தொல்லை விலகும்.
ரேவதி: தைரியத்துடன் செயல்படுவீர்கள். எதிரிகள் விலகிச் செல்வர். விருப்பம் ஒன்று நிறைவேறும்.