அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 16.09.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasuat day's ago

மேஷம்
அசுவினி: எதிர்பார்த்த வரவு வந்து சேரும். பணம், நகைகளைக் கையாள்வதில் கவனம் தேவை.
பரணி: பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
கார்த்திகை 1: நண்பர் உதவியுடன் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். பணவரவு அதிகரிக்கும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: நீண்ட நாளாக முயற்சி செய்த ஒரு செயல் இன்று நிறைவேறும். லாபமான நாள்.
ரோகிணி: வீண் குழப்பம் அதிகரிக்கும் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். கவனம் தேவை.
மிருகசீரிடம் 1, 2: வாழ்க்கைத் துணையால் அனுகூல நிலையை அடைவீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: திடீர் பயணம் உண்டாகும். அலைச்சல், செலவு அதிகரிக்கும். கவனமுடன் செயல்படுங்கள்.
திருவாதிரை: புதிய பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக செலவு அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3: அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு அவசர வேலைகள் வந்து அலைக்கழிக்கும்.

கடகம்: 
புனர்பூசம் 4: எதிர்பார்த்த ஆதாயம் வந்து சேரும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
பூசம்: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வர வேண்டிய பணம் வசூலாகும்.
ஆயில்யம்: நண்பர்களுடன் கூட்டுத்தொழில் தொடங்குவது பற்றி ஆலோசிப்பீர்கள்.

சிம்மம்
மகம்: செயல்களில் இருந்த இடையூறு விலகும். தடைபட்ட பணிகளை நிறைவேற்றுவீர்கள்.
பூரம்: நினைத்தது நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு நன்மையை அடைவீர்கள்.
உத்தரம் 1: பணிபுரியும் இடத்தில திறமையை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு உண்டு.

கன்னி
உத்திரம் 2, 3, 4: இரண்டு நாளாக இருந்த நெருக்கடி விலகும். விருப்பம் இன்று நிறைவேறும்.
அஸ்தம்: பழைய பிரச்னைக்கு முடிவு கட்டுவீர்கள். குடும்பநலனில் அக்கறை கொள்வீர்கள்.
சித்திரை 1, 2: மனதில் நிம்மதி உண்டாகும் நாள். முயற்சியில் இருந்த தடைகள் விலகும்.

துலாம்
சித்திரை 3, 4: அமைதி காக்க வேண்டிய நாள். புதிய முயற்சியில் இன்று ஈடுபட வேண்டாம்.
சுவாதி: எதிர்பாராமல் பிரச்னையை சந்திப்பீர்கள். வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.
விசாகம் 1, 2, 3: மனக்குழப்பம் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். சங்கடத்திற்கு ஆளாகலாம். நிதானம் தேவை.

விருச்சிகம்
விசாகம் 4: நினைத்ததை முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
அனுஷம்: குடும்பத்தில் மற்றவரால் ஏற்பட்ட குழப்பம் விலகும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.
கேட்டை: திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் வரும். மகிழ்ச்சியான நாள்.

தனுசு
மூலம்: செயலில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர்கள். எண்ணம் நிறைவேறும். எதிர்ப்பு விலகும்.
பூராடம்: சொத்து பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
உத்திராடம் 1: ஆரோக்கியத்தில் அக்கறை கூடும். சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பொருளாதார சிக்கல் தீரும். வருமானம் அதிகரிக்கும்.
திருவோணம்: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் முயற்சி லாபமாகும்.
அவிட்டம் 1, 2: தனித்தன்மை இன்று வெளிப்படும். இழுபறியாக இருந்த பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: குழப்பம் தீரும். நீங்கள் எண்ணியதை அடைந்து மகிழ்ச்சியடைவீர்கள்.
சதயம்: நீங்கள் எதிர்பார்த்தவற்றில் அனுகூலம் கிடைக்கும். நிறைவேறாமல் இருந்த விஷயம் நிறைவேறும்.
பூரட்டாதி 1, 2, 3: பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுவீர்கள். செலவு அதிகரிக்கும்.

மீனம்
பூரட்டாதி 4: எதிர்காலம் குறித்து திட்டமிடுவீர்கள். சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும்.
உத்திரட்டாதி: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.
ரேவதி: லாபம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.