அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 15.09.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasuat day's ago

மேஷம்
அசுவினி : உங்கள் செயல்களில் எதிர்பார்த்த நன்மை அடைய முடிய தாமதம் ஏற்படும்.
பரணி : உங்கள் கவனக்குறைவால் பணிகளில் தடுமாற்றம் ஏற்படும். நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
கார்த்திகை 1 : ஆசைகள் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் செயல்களில் இழுபறி நிலை உண்டாகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : மாலை வரை பணியிடத்தில் வேலை பளு அதிகரிக்கும். திடீர் செலவுகள் அதிகரிக்கும்.
ரோகிணி : வரவுகள் ஒரு பக்கம் வந்தாலும் செலவுகள் மறுபக்கம் தயாராக இருக்கும். நிதானம் தேவையான நாள்.
மிருகசீரிடம் 1, 2 : குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். கடன் வாங்கி செலவு செய்வீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : அரசு வழியிலான முயற்சி லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவாதிரை : புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் நிதிநிலை உயரும்.
புனர்பூசம் 1, 2, 3: பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு உண்டாகும்.

கடகம்
புனர்பூசம் 4 : தொழிலில் இருந்த மந்த நிலை சரியாகும். உங்கள் அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும்.
பூசம் : புதிய திட்டங்கள் தீட்டி செயல்படுவீர்கள். நண்பர்கள் உதவியுடன் முயற்சி பலிதமாகும்.
ஆயில்யம் : பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நிதிநிலை உயரும்.

சிம்மம்
மகம் : நேற்று வரை இருந்த சங்கடமான நிலை மாறும். உற்சாகமாக செயல்படுவீர்கள்.
பூரம் : நீங்கள் நினைத்திருந்த ஒரு செயலை நிறைவேற்றுவீர்கள். பொருளாதார நிலை உயரும்.
உத்தரம் 1 : உங்கள் முயற்சியில் சிறு சிறு தடைக்குப்பின் நிறைவேறும். எதிர்பார்த்த பண வரவு உண்டு.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : மற்றவரை நம்பி எந்தப்பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.
அஸ்தம் : எதிர்பார்த்த செயல்களில் பின்னடைவும் மறைமுக எதிர்ப்பும் உண்டாகும்.
சித்திரை 1, 2: புதிய முயற்சிகள் எதுவும் இன்று வேண்டாம். நிதானம் காப்பது நன்மையாகும்.

துலாம்
சித்திரை 3, 4 : மாலைக்குள் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சுவாதி: இன்று மாலை சந்திராஷ்டமம் தொடங்குவதால் செய்யும் செயல்களில் நிதானம் அவசியம்.
விசாகம் 1, 2, 3 : இன்று மாலை வரை குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும்.

விருச்சிகம்
விசாகம் 4 : உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும்.
அனுஷம் : பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
கேட்டை : வேகமாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கோயிலுக்கு செல்வீர்கள்.

தனுசு
மூலம் : செயல்களில் தடைகளை சந்திப்பீர்கள். சிந்தித்து செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும்.
பூராடம் : கடும் முயற்சிக்குப்பின் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள். பெற்றோர் வழியே நன்மையுண்டு.
உத்திராடம் 1: வேலைக்காக மேற்கொண்ட முயற்சியில் அனுகூலம் உண்டு. விலகிச்சென்றவர் விரும்பி வருவர்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : உங்கள் மனம் விரும்பும் வகையில் செயல்படுவீர்கள். அரசு வழியில் நன்மைக் காண்பீர்கள்.
திருவோணம் : எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்களுடைய எண்ணம் நிறைவேறும்.
அவிட்டம் 1, 2 : இன்று தொழிலில் சங்கடங்களை சந்தித்தாலும் முயற்சியால் லாபம் அடைவீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: திட்டமிட்டு செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.
சதயம் : உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தடைபட்டிருந்த செயல் நிறைவேறும்.
பூரட்டாதி 1, 2, 3 : சகோதரர்கள் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். ஆரோக்யத்தில் கவனம் தேவை.

மீனம்
பூரட்டாதி 4 : குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களை சரி செய்வீர்கள். உங்கள் வருமானம் உயரும்.
உத்திரட்டாதி : வார்த்தைகளில் கவனம் தேவை. பணியிடத்தில் மற்றவர்களை அனுசரித்து செல்வீர்கள்.
ரேவதி : சிந்தித்து செயல்படுவதின் மூலம் சங்கடத்தில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார நிலை உயரும்.