அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 10.08.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasuat month ago

மேஷம்
அசுவினி: முயற்சியில் இருந்த தடைகள் விலகும். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்.
பரணி: பொருளாதார நெருக்கடி விலகும். நீண்ட நாள் முயற்சி ஒன்று நிறைவேறும்.
கார்த்திகை 1: உறவினர் உங்கள் உதவியை தேடி வருவர். உங்களின் செல்வாக்கு உயரும்

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: மதியம் வரை உங்கள் முயற்சிகள் இழுபறியாகும். அதன்பின் நிறைவேறும்.
ரோகிணி: திட்டமிட்டு செயல்படுவீர்கள். மதியம் வரை இருந்த நெருக்கடி மாலை விலகும்.
மிருகசீரிடம் 1, 2: தடைகளைத் தாண்டி ஒரு முயற்சியில் லாபம் காண்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: மதியத்திற்கு மேல் உங்கள் முயற்சியில் பின்னடைவு உண்டாகும்.
திருவாதிரை: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எந்தவொரு செயலிலும் அவசரம் வேண்டாம்.
புனர்பூசம் 1, 2, 3: முயற்சிகள் இழுபறியாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும்.

கடகம்
புனர்பூசம் 4: நண்பர்களின் ஆதரவுடன் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள்.
பூசம்: உறவுகளிடம் உண்டான பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள். முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள்.
ஆயில்யம்: வாழ்க்கைத் துணையின் வழிகாட்டுதலால் உங்களுடைய எண்ணம் நிறைவேறும்.

சிம்மம்
மகம்: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பகைவர்கள் விலகிச் செல்வர்.
பூரம்: உங்களது உடல்நிலை சீராகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
உத்திரம் 1: முயற்சியில் இருந்த தடை விலகும். மகிழ்ச்சியான நாள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: முயற்சியில் தடைகளை சந்தித்தாலும் போராடி வெல்வீர்கள். பொருளாதார நிலை உயரும்.
அஸ்தம்: விலகிச்சென்ற உறவினர்கள் உங்களின் வீடு தேடி வருவார்கள்.
சித்திரை 1, 2: கையை விட்டுப் போன ஒப்பந்தம் இன்று மீண்டும் உங்களிடம் வந்து சேரும்.

துலாம்
சித்திரை 3, 4: மனதில் ஆசைகள் கூடும். உங்களுடைய தேவைகளில் ஒன்று நிறைவேறும்.
சுவாதி: முயற்சி பலன் தரும். எதிர்பாலினத்தினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
விசாகம் 1, 2, 3: குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற கடுமையான முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4: வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். பெரியோரின் ஆதரவு உண்டு.
அனுஷம்: சுபச்செலவு கூடும். சிலர் நகை, வாகனம் என்று வாங்கி மகிழ்வீர்கள்
கேட்டை: உங்களின் தனித்திறமை வெளிப்படும். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர்.

தனுசு
மூலம்: குடும்பத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த வரவு உண்டு.
பூராடம்: மனக்குழப்பம் தீரும். பிறருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.
உத்திராடம் 1: செயல்களில் லாபம் காண்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: நேற்றைய செயல் ஒன்றால் சங்கடம் தோன்றும். குழப்பத்தில் மூழ்குவீர்கள்.
திருவோணம்: மனதில் தடுமாற்றம் ஏற்பட்டு செயல்களைத் தள்ளிப் போடுவீர்கள்.
அவிட்டம் 1, 2: திட்டமிட்ட செயல்களிலும் எதிர்பார்த்த லாபத்தைக் காண முடியாமல் போகும்

கும்பம்
அவிட்டம் 3, 4: முயற்சி ஒன்று வெற்றியாகும். உங்கள் நிதிநிலை உயரும்.
சதயம்: பழைய முதலீட்டில் இருந்து லாபம் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கையால் மகிழ்வீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்த வரவுகள் உண்டு. குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும்.

மீனம்
பூரட்டாதி 4: உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
உத்திரட்டாதி: பணியிடத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர்கள். மகிழ்ச்சி கூடும்.
ரேவதி: நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. புதிய இடம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.