முயற்சிகளால் வெற்றியடைய போகும் நான்கு ராசிக்காரர்கள் , அதிலும் ரிஷப ராசிக்காரர்களுக்கான இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasuat month's ago

மேஷம்: 
அசுவினி: முயற்சிகளில் தடைகள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். செயல்களில் கவனம் தேவை.
பரணி: முயற்சியில் இழுபறி உண்டானாலும் போராடி முடிப்பீர்கள். எதிர்பாலினர் நட்பில் எச்சரிக்கை அவசியம்.
கார்த்திகை 1: நீண்ட இழுபறிக்குப்பின் முயற்சிகள் முடிவிற்கு வரும். நண்பர்களுக்காக செலவுகளை செய்வீர்கள்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பண வரவு திருப்தியாக இருக்கும்.
ரோகிணி: இழுபறியாக இருந்த செயல்கள் நிறைவேறும். எதிர்பார்த்த ஒன்று உங்களை வந்து சேரும்.
மிருகசீரிடம் 1, 2: உங்கள் திறமை வெளிப்படும். நீண்ட நாள் எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: தொழிலில் புதிய உத்திகளைக் கையாள்வீர்கள். உறவினர் வழியில் நன்மைகள் அதிகரிக்கும்.
திருவாதிரை: புதிய முயற்சி ஒன்று வெற்றியாகும். தொழிலில் போட்டியாளர்கள் விலகுவார்கள்.
புனர்பூசம் 1, 2, 3: குழந்தைகள் குறித்த சிந்தனை மேலோங்கும். எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்
புனர்பூசம் 1, 2, 3: தந்தை வழி உறவுகளால் உதவி கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத திருப்பத்தை சந்திப்பீர்கள்.
பூசம்: முயற்சியில் வெற்றிபெற திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் தனித்திறமை வெளிப்படும்.
ஆயில்யம்: உங்களது உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்
மகம்: எதிரிகளால் சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். செயல்களில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.
பூரம்: மனதில் ஒருவித பயம் வந்துபோகும். எதிர்பார்த்தவற்றில் தடைகள் உண்டாகும்.
உத்திரம் 1: பிரச்னைகள் உங்களைத் தேடி வரும். வழக்கமான உங்கள் செயல்களில் மாற்றம் உண்டாகும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: புதிய முயற்சி ஒன்றில் ஆதாயம் காண்பீர்கள். நட்புகளால் நன்மை உண்டு.
அஸ்தம்: உங்கள் அணுகுமுறையால் செயலில் ஆதாயம் உண்டாகும். நன்மை அதிகரிக்கும்.
சித்திரை 1, 2: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி எளிதாக வெற்றிபெறும்.

துலாம்
சித்திரை 3, 4: முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் போட்டியாளர்களால் உண்டான நெருக்கடி விலகும்.
சுவாதி: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். நிறைவேறாமல் இருந்த ஒரு வேலை இன்று முடிவிற்கு வரும்.
விசாகம் 1, 2, 3: சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உறவினர்கள் உதவியாக இருப்பர்.

விருச்சிகம்
விசாகம் 4: உங்களுடன் நெருக்கமாக இருந்தவர்களின் வழியே, சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
அனுஷம்: செயல்கள் இழுபறியாகும். நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும்.
கேட்டை: குழந்தைகள் வழியே நன்மை அடைவீர்கள். முயற்சி ஒன்று நிறைவேறும்.

தனுசு
மூலம்: தேவையற்ற பயம் வந்து போகும். பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும்.
பூராடம்: உங்கள் சந்தோஷத்திற்காக ஒரு செயலில் ஈடுபடுவீர்கள். நெருக்கமானவர்களின் ஆதரவு நன்மை தரும்.
உத்திராடம் 1: அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: இழுபறியாக இருந்த ஒரு செயல் நிறைவேறும். எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள்.
திருவோணம்: செயலில் இருந்த தடைகள் விலகும். உயர்ந்தோரின் நட்பினால் நீங்கள் நினைத்தது நிறைவேறும்
அவிட்டம் 1, 2: முயற்சியில் வெற்றிகளைக் காண்பீர்கள். விஐபிகளின் சந்திப்பால் உங்கள் எண்ணம் ஈடேறும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: பேச்சில் நிதானம் தேவை. அவசரப்பட்டு யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம்.
சதயம்: உங்கள் கவனக்குறைவால் சில இழப்புகள் உருவாகலாம். நிதானித்து செயல்படுங்கள்.
பூரட்டாதி 1, 2, 3: செயல்களில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். வார்த்தைகளில் கவனம் தேவை.

மீனம்
பூரட்டாதி 4: மனம் அலைபாயும். முக்கியமான ஒரு செயலில் முடிவிற்கு வர முடியாமல் போகும்.
உத்திரட்டாதி: பணியில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். பொறுப்புகளில் கூடுதல் கவனம் தேவை.
ரேவதி: வியாபாரத்தில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். செயலில் கவனம் அவசியம்.