சர்வதேச யானைகள் தினம் இன்று

Kesariat year ago

சர்வதேச யானைகள் தினம் இன்றாகும்.

யானைகளை பாதுகாக்கும் நோக்கில், ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி யானைகள் தினம் கொண்டாடப்படுகின்றது.

இதனிடையே, சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.

யானை – மனித மோதலை தீர்ப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

யானைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் பிரதமர் தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.