நிதானமாக செயல்பட வேண்டிய மூன்று ராசிக்காரர்கள் , அதிஷ்டத்தை பெறப்போகும் ஒரேயொரு ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasuat month ago

மேஷம்
அசுவினி: முயற்சியில் வெற்றி அடைவீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். ஆதாயமான நாள்.
பரணி: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். பண வரவால் கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள்.
கார்த்திகை 1: முயற்சியில் உண்டான தடைகள் விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: குடும்பத்தில் சில பிரச்னைகள் தோன்றும். எதற்காகவும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்.
ரோகிணி: உங்கள் தன்மானத்தை சீண்டும் வகையில் இன்று சிலர் செயல்படலாம். அமைதி காப்பது நன்மையாகும்.
மிருகசீரிடம் 1, 2: வார்த்தைகளில் கவனம் தேவை. யாருக்கும் எந்த வாக்குறுதியும் வழங்க வேண்டாம்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: நெருக்கடிகளை சமாளித்து நினைத்ததை அடைவீர்கள். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவாதிரை: உத்தியோகத்தில் ஏற்பட்ட அழுத்தம் குறையும். விரும்பியதை அடைவீர்கள். வரவுகள் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3: மனதிற்கினிய சம்பவம் நடந்தேறும். எதிர்பார்த்தவற்றில் ஆதாயமும் அனுகூலமும் ஏற்படும்.

கடகம்
புனர்பூசம் 1, 2, 3: எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பயணத்திலும், வரவு செலவிலும் கவனம் தேவை.
பூசம்: அரசு வழியில் நன்மைகள் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் முயற்சி லாபமாகும்.
ஆயில்யம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக செலவுகள் செய்வீர்கள்.

சிம்மம்
மகம்: நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வசூலாகும். சொத்துகள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
பூரம்: நேற்றைய எதிர்பார்ப்புகள் இன்று நிறைவேறும். புதிய நட்புகளால் ஆதாயம் அடைவீர்கள்.
உத்திரம் 1: விலகிச்சென்ற உறவினர்கள் உங்களைத தேடி வருவர். உங்கள் வாக்கிற்கு மரியாதை உண்டாகும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டிற்கு ஆளாவீர்கள்.
அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த தடைகளை சரி செய்து நினைத்ததை சாதிப்பீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும்.
சித்திரை 1, 2: புதிய முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரி செய்வீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். அரசு வழியில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
சுவாதி: புதிய முயற்சி லாபமாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். லாபமான நாள்.
விசாகம் 1, 2, 3: வம்பு வழக்குகள் சங்கடப்படுத்தும். சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட வேண்டாம்.

விருச்சிகம்
விசாகம் 4: மனதை சங்கடப்படுத்தும் வகையில் சில விஷயங்கள் நடக்கும். அமைதி காப்பது நன்மையாகும்.
அனுஷம்: நட்புகளிடம் மோதல் உண்டாகும். பிறரது விவகாரங்களில் தலையிடுவதால் பிரச்னை ஏற்படும்.
கேட்டை: நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். நிதானமாக செயல்படுவது நல்லது.

தனுசு
மூலம்: நண்பர்கள் வழியே நன்மைகளைக் காண்பீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.
பூராடம்: குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணையின் விருப்பப்படி செயல்படுவீர்கள்.
உத்திராடம் 1: எதிர்பார்த்ததை அடைவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: உற்சாகமுடன் செயல்படுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.
திருவோணம்: எதிரிகள் உங்களிடம் வந்து சரண் அடைவார்கள். நீங்கள் நினைத்ததை அடைவீர்கள்.
அவிட்டம் 1, 2: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: குழந்தைகள் வழியே செலவுகள் அதிகரிக்கும். செயல்களில் தடைகளும் தாமதமும் ஏற்படும்.
சதயம்: குடும்பத்தினரால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்தவற்றில் நன்மைகளைக் காண முடியாமல் போகும். கவனம் தேவை.

மீனம்
பூரட்டாதி 4: பணியிடத்தில் நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள்.
உத்திரட்டாதி: உடல் நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். உங்கள் செயலில் பிறர் குறை சொல்வார்கள்.
ரேவதி: வேலை நெருக்கடியின் காரணமாக மனஅழுத்தம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.