தொழிலில் இலாபம் அடையவுள்ள மூன்று ராசிக்காரர்கள் , அதிலும் மீன ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasuat day's ago

மேஷம்
அசுவினி : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கோயிலுக்கு செல்வீர்கள்.
பரணி : இரண்டு நாள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் எண்ணம் பலிக்கும்.
கார்த்திகை 1 : லாபகரமான தகவல் வரும். நண்பர்களால் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: தொழிலுக்கான பணம் தடையில்லாமல் வரும். முயற்சியில் முன்னேற்றம் உண்டு.
ரோகிணி : நீங்கள் நினைத்ததை செய்து முடிப்பீர். உங்கள் செயல் வெற்றியாகும்.
மிருகசீரிடம் 1, 2 : வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். புதியவர்களால் லாபம் காண்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : உங்கள் முயற்சியில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். தைரியமாக எதிர்கொள்வீர்.
திருவாதிரை : சிறு சிறு மனஉளைச்சலுக்கு ஆளாவீர்கள். நிதானம் தேவை.
புனர்பூசம் 1, 2, 3: திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அதனால் அலைச்சல் அதிகரிக்கும்.

கடகம்
புனர்பூசம் 4 : வாழ்க்கைத் துணையின் உதவியுடன் ஒரு முயற்சியை மேற்கொள்வீர்கள்.
பூசம் : நண்பரிடம் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த வருமானம் வரும்.
ஆயில்யம் : உங்களுடைய நேற்றைய விருப்பம் ஒன்று எளிதாக நிறைவேறும் நாள்.

சிம்மம்
மகம் : முயற்சியில் போராடி வெற்றி காண்பீர்கள். நீண்ட நாள் பிரச்னை ஒன்று விலகும்.
பூரம் : மனதில் இருந்து வந்த குழப்பம் அகலும். துணிச்சலாக செயல்படுவீர்கள்.
உத்திரம் 1 : சுறு சுறுப்பாக செயல்பட்டு வியாபாரத்தில் தடைகளை அகற்றுவீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: உங்கள் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும்.
அஸ்தம் : நண்பர்கள் ஆதரவுடன் நீங்கள் ஈடுபடும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
சித்திரை 1, 2: எதிர்பாராத வருவாய் வந்து உங்கள் தேவையை பூர்த்தி செய்யும். பெரியோரின் ஆசி உண்டு.

துலாம்
சித்திரை 3, 4 : உங்கள் பலம் இன்று மற்றவர்களுக்கு தெரியும். செயல்களில் லாபம் உண்டாகும்.
சுவாதி : மற்றவர்கள் ஆலோசனைக்கு இடம் கொடுக்காதீர். உங்கள் முயற்சிகளில் லாபம் காண்பீர்கள்.
விசாகம் 1, 2, 3 : உங்கள் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் காண்பீர். மனதை கட்டுக்குள் வையுங்கள்.

விருச்சிகம்
விசாகம் 4: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். பணபுழக்கம் அதிகரிக்கும்.
அனுஷம் : வருமானம் பெருகும். பழைய கடன்களை அடைப்பீர்கள். யோகமான நாள்.
கேட்டை : உங்கள் செல்வாக்கு வெளிப்படும். நீங்கள் விரும்பியவற்றில் வெற்றி காண்பீர்கள்.

தனுசு
மூலம் : பணம் நகைகளைக் கையாளுவதில் விழிப்புணர்வுடன் தேவை. வீண் பேச்சை தவிர்க்கவும்.
பூராடம் : உங்கள் செயலில் சாதகமான நிலை உண்டாகும். நண்பர்கள் உதவியால் லாபம் காண்பீர்கள்.
உத்திராடம் 1 : கொடுத்த வாக்கை நிறைவேற்றி இரட்டிப்பு மகிழ்ச்சியை குடும்பத்தில் ஏற்படுத்துவீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : இனம் புரியாத குழப்பம் ஏற்பட்டு செயல்களில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.
திருவோணம் : உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றம் உண்டாகும். பின்னர் முயற்சியுடன் செயல்படுத்துவீர்.
அவிட்டம் 1, 2 : நினைத்ததை அடைய வேண்டுமென்று துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : குடும்பத்திற்கான செலவு அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் தாமதம் உண்டாகும்.
சதயம்: ஆடம்பர செலவால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 : திடீர் செலவுகளால் சங்கடம் ஏற்படும்.குடும்பத்திற்குள் நிம்மதியற்ற நிலை உண்டாகும்.

மீனம்
பூரட்டாதி 4: வருமானத்தில் இருந்து வந்த தடை விலகும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.
உத்திரட்டாதி : உங்கள் முயற்சி இன்று நிறைவேறும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் தேடி வருவர்.
ரேவதி : எதிர்பார்ப்புடன் ஒரு செயலில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். நிதிநிலை உயரும் நாள்.