அதிஷ்டம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள் , அதிலும் கடக ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasuat month ago

மேஷம்: 
அசுவினி: குடும்பத்தினர் விருப்பத்தை திறைவேற்றுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
பரணி: புதிய நட்புகளால் அனுகூலம் அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
கார்த்திகை 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். திடீர் பணவரவு உண்டு.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: செயலில் தடுமாற்றம் உண்டாகும் என்றாலும், சமாளித்து முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.
ரோகிணி: உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள புதிய வழிமுறைகளைக் கையாள்வீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: எதிர்பாராத தடைகளால் செயல்களில் இழுபறி உண்டாகும். சிந்தித்து செயல்படுங்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: செலவுகள் ஒரு பக்கம் அதிகரித்தாலும், மறு பக்கம் உங்கள் தேவைகள் நிறைவேறும்.
திருவாதிரை: திடீர் செலவுகளை சந்திக்க வேண்டிவரும் என்பதால் கவனமுடன் செயல்படுங்கள்.
புனர்பூசம் 1, 2, 3: மனதிற்கு இனிய சம்பவம் ஒன்று நடைபெறும். எதிர்பாலினரால் ஆதாயம் அடைவீர்கள்.

கடகம்
புனர்பூசம் 1, 2, 3: நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.
பூசம்: வெளி வட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். விஐபிகளின் ஆதரவால் முயற்சி நிறைவேறும்.
ஆயில்யம்: தொழிலில் இருந்த தடைகளை சரி செய்வீர்கள். எதிர்பாராத வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

சிம்மம்
மகம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். லாபம் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும்.
பூரம்: எதிர்பார்த்த வரவு வந்து சேரும். இழுபறியாக இருந்த வேலைகள் நிறைவேறும்.
உத்திரம் 1: பிரபலங்களை சந்தித்து அதன் வழியே சில வேலைகளை முடிப்பீர்கள். முயற்சியில் ஆதாயம் ஏற்படும்.

கன்னி: 
உத்திரம் 2, 3, 4: திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் குழப்பம் தோன்றி சங்கடப்படுத்தும்.
அஸ்தம்: நீங்கள் ஈடுபடும் வேலையில் தடைகள் உண்டானாலும், இறுதியில் முயற்சி வெற்றியாகும்.
சித்திரை 1, 2: செயல்களில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்கள். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்: 
சித்திரை 3, 4: சட்டத்திற்கு புறம்பான செயல்களால் சங்கடத்தை அடைவீர்கள். கவனம் தேவை.
சுவாதி: யோசிக்காமல் எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம். உங்கள் முயற்சிகள் இழுபறியாகும்.
விசாகம் 1, 2, 3: எதிர்பாராத பிரச்னைகள் வரும். வருமானத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறாமல் போகும்.

விருச்சிகம்
விசாகம் 4: எதிர்பாராத இடத்தில் இருந்து வரவு வரும். இன்று மாலை வரை உங்கள் முயற்சி லாபம் தரும்.
அனுஷம்: குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். செயல்களில் கவனம் தேவை.
கேட்டை: முயற்சிக்கேற்ற லாபத்தை அடைவீர்கள். மாலை வரை இருந்த மகிழ்ச்சி அதன்பின் மாறும்.

தனுசு
மூலம்: நீங்கள் நினைத்ததை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
பூராடம்: எதிரிகள் விலகிச் செல்வார்கள். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
உத்திராடம் 1: உற்சாகம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்தி உங்களை வந்து சேரும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: உழைப்பு அதிகரிக்கும். குழந்தைகளால் சில சங்கடங்களை அடைவீர்கள்.
திருவோணம்: சொத்துகளில் இருந்த பிரச்னைகள் மீண்டும் தலை எடுக்கும். உறவினரால் சங்கடம் அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2: அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் செய்தும் நினைத்ததை சாதிக்க முடியாமல் சோர்வு அடைவீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: தாய்வழி உறவுகளின் ஆதரவால் எண்ணம் நிறைவேறும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
சதயம்: கடுமையான முயற்சிக்குப்பின் உங்கள் செயல் லாபமாகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
பூரட்டாதி 1, 2, 3: தொழில் ரீதியாக சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்
பூரட்டாதி 4: நீண்டநாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். செயல்களில் வெற்றி காண்பீர்கள்.
உத்திரட்டாதி: நினைத்ததை சாதிப்பீர்கள். சகோதரர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
ரேவதி: உங்கள் ஆற்றல் வெளிப்படும். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.