பேராதனை பல்கலைக்கழக பட்டதாரிகளை தாக்கியமை தொடர்பில் மூன்று பட்டதாரி மாணவர்கள் இடைநிறுத்தம்

kaniat day's ago

பேராதனை பல்கலைக்கழக சட்ட பீடத்தில் இளங்கலை பட்டதாரிகளை தாக்கியமை தொடர்பில் மூன்று பட்டதாரி மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

சட்ட பீடத்தைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரிகள் எப்போதுமே எந்த வடிவத்திலும் பல்கலைக்கழகத்தில், பகிடிவதை ('ரேகிங்' ) செய்வதை எதிர்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் சட்ட பீட இளங்கலை மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கலைப் பீடத்தின் மூன்று இளங்கலை மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர், பகிடிவதையை கட்டுப்படுத்த, பொறிமுறை ஒன்று நடைமுறைப்படுதப்படுள்ளது.

அத்துடன் சட்ட பீடத்தின் இளங்கலை மாணவர்கள் மீதான பகிடிவதை மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் பல்கலைக்கழக நிர்வாகதினரும் சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.