நயன்தாரா துபாய் சென்றதற்கு காரணம் இது தானாம் !

Prabhaat day's ago

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயனதாரா தற்போது காதல் வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து கனெக்ட், கோல்ட், அட்லீயின் ஹிந்தி திரைப்படம் செம பிஸியாக தனது படங்களை நடித்து முடிக்கவுள்ளார் நடிகை நயன்தாரா.

இதனிடையே நயன்தாரா சாய் வாலா என்ற டீ நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து வருகிறார், மேலும் சமீபத்தில் தனது தோழியுடன் இணைந்து தி லிப் பாம் என்ற அழகுசாதன தயாரிக்கும் பொருள் நிறுவனத்தையும் தொடங்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா மேலும் ஒரு புதிய பிசினஸை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி துபாய்யில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் எண்ணெய் பிசினஸ் தொடங்க நயன்தாரா திட்டமிட்டுள்ளாராம்.

அது குறித்து முடிவெடுக்கவே நயன்தாரா தனது விக்னேஷ் சிவனுடன் இணைந்து புத்தாண்டிற்கு துபாய் சென்றிருந்ததாக கூறப்படுகிறது.   

மேலும் சினிமா செய்திகளைப் பார்வையிட இதில் கிலிக் செய்யவும்