சுவிட்சர்லாந்தில் மனிதர்களை அச்சுறுத்தி வந்த ஓநாய்...சரமாரியாக சுட்ட அதிகாரிகள்..!!

Keerthiat month's ago

சுவிட்சர்லாந்தில் மனிதர்களை அச்சுறுத்தி வந்த ஓநாய் கடந்த வெள்ளிக்கிழமையன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்திலுள்ள கிராபண்டனில் என்னும் பகுதியில் ஓநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உள்ளூர் அதிகாரிகள் ஓநாய்களை ரப்பர் தோட்டாக்களின் மூலம் பயமுறுத்த பல முயற்சிகளை எடுத்ததை தொடர்ந்து அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்நிலையில் அண்மையில் ஓநாய் ஒன்று அப்பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவரை 2 மீட்டர் இடைவெளிக்குள் பின்தொடர்ந்து சென்றுள்ளது. ஆகையினால் பொதுமக்களை பாதுகாக்கும் முயற்சியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த ஓநாய் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.