போராட்டத்திற்காக சென்றிருந்த வேளை சிவாஜிலிங்கம் பயணித்த வாகனம் விபத்து!

#Sri Lanka #M K Sivajilingam #Accident #Police #luxury vehicle #Trincomalee #Protest #Lanka4 #sri lanka tamil news
Amuthuat month ago

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை  10 மணியளவியில் போராட்டத்திற்காக திருகோணமலையில் இருந்து வெருகலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பொழுதே குறித்த விபத்து சர்வலை பகுதியில் இடம்பற்றுள்ளது.

குறித்த வாகனத்தில் சிவாஜிலிங்கம் உட்பட அவரது சாரதி மற்றும் ஒரு ஊடகவியாளர் பயணம் செய்துள்ளனர்.

தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி யாழ். பல்கலைக்கழகம் மாணவர்கள் ஏற்பாடு செய்த வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாளான இன்றையதினம் வெருகல் சித்திரவேலாயுத சாமி கோவில் இருந்து ஆரம்பித்த பேரணியில் கலந்து கொண்டிருந்த வேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில்  சிவாஜிலிங்கத்திற்கு காயங்கள் எதுவும் ஏற்படவிலை. சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியத்துடன் வாகனமும் சேதமடைந்துள்ளது. 

sivaji1
sivaji