இரண்டாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு!

Rehaat day's ago

வேதனம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட வேண்டும் எனத் தாதியர், இடைநிலை வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் இன்று இரண்டாம் நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

அவர்களது இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று வைத்தியசாலைக்கு சென்றிருந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.