இந்தியன் 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஆரம்பித்தது

Maniat month ago

இந்தியன் 2 படத்தை கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. கொரோனா லாக்டவுனில் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற விபத்து காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வருட காலமாக தேங்கியிருந்தது இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நீண்ட காலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் தான் இந்தியன் 2 கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து மூன்று தொழிலாளிகள் உயிரிழந்த இழந்தனர்,இதனை தொடர்ந்து கொரோனா லாக்டவுன் என பல காரணங்களால் படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டது, தற்போது இந்தியன் 2 பிரச்சனைகள் எல்லாம் பேசி தீர்க்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் நடந்தது, தற்போது திருப்பதிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது.

வனப்பகுதியில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு கமல் ஹெலிகாப்டரில் வந்து செல்கிறார் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் லைக்கா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவி இணைந்து தயாரிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், கமலுடன் நடிகர்கள் சித்தார்த்,காஜர் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா,பிரியா பவானி சங்கர்,சமுத்திரகனி,குரு சோமசுந்தரம், மனோபாலா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடிக்கின்றனர்.