சுவிற்சலாந்தில் ஏதிலிகளின் கல்வி உரிமை உறுதிசெய்யப்படல் வேண்டும்.

#world news
Kesariat day's ago

சுவிட்சர்லர்நதில் ஏதிலிகளுக்கான கல்வி வசதிகளை மேம்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பொன்று இந்த கோரிக்கையை அரசாங்கத்திடம் விடுத்துள்ளது.

தனிப்பட்ட நபர்களின் சட்ட அந்தஸ்தை பாராது அனைத்து அனைவருக்கும் கல்வி உரிமையை உறுதி செய்ய வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.

ஏதிலிகள், சட்டவிரோத குடியேறிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆகியோர் கல்வியைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு இடர்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் கோரியுள்ள குடும்பங்களுக்கு வீட்டு வசதி மற்றும் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும் வசதி என்பனவற்றை வழங்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

மேலும் வயது வந்தவர்கள் சுவிட்சர்லாந்து சமூகத்துடன் இணைந்து கொள்வதற்கு அவர்களுக்கு உயர்கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

தேசிய மற்றும் கான்டன்களில் காணப்படும் கல்வி நிறுவனங்கள் குடியேறிகளுக்கு உயர்கல்வியை தொடர்வதற்கான ஒழுங்குகளை செய்து கொடுக்க வேண்டுமென இந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் கோரியுள்ளன.

குறிப்பாக பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும், டிப்ளோமா கற்கை நெறிகளை அங்கீகரிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளன.

ஏதிலிகளுக்கான கல்வி உரிமையை உறுதி செய்வதற்கான முனைப்புக்களை கடந்த ஆண்டு முதல் இந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.