பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதியதாக நுழைந்த பிரபலம்

Prabhaat day's ago

பிக்பஸ் 5வது சீசன் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் இப்போது வரை ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

சில போட்டியாளர்கள் மக்களின் பேவரெட்டாக உள்ளார்கள், மற்றவர்களை மக்கள் கொஞ்சம் வெறுக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக மீண்டும் அபிஷேக் வீட்டிற்குள் வர புதியதாக அமீர் என்ற நடன கலைஞர் வீட்டிற்குள் நுழைந்தார்.

இன்று காலை நிகழ்ச்சியின் புதிய புரொமோ வந்துள்ளது, அதில் வீட்டின் வேலைகள் எந்த டாஸ்கில் இருந்தாலும் செய்ய வேண்டும் அப்படி செய்யாதவர்கள் எலிமினேஷனுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவார் என பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

அதன்பிறகு பிக்பாஸ் வீட்டின் கதவு திறக்க அதைப்பார்த்த போட்டியாளர்கள் யாரோ வருகிறார்கள் என்று மகிழ்ச்சியில் யார் என்று அவலாக பார்க்கிறார்கள்.

அது யார் என்பது அடுத்து வரும் புரொமோவில் தான் தெரிய வரும். ஆனால் நமக்கு கிடைத்த தகவல்படி பிரபல சின்னத்திரை நடிகரான சஞ்சீவ் என கூறப்படுகிறது.