துருக்கி நிலநடுக்கத்தை முன்கூட்டியே காட்டிக் கொடுத்த பறவைகள்!

#world news #Death #Earthquake #Lanka4 #sri lanka tamil news #Tamilnews #Birds #bird species
Amuthuat month ago

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை   பறவைகள் கூட்டம் முன்னதாகவே உணர்த்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

பறவைகள் காசியான்டேப் பகுதியை  சுற்றி வட்டமடித்துள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.

துருக்கி, சிரியா என இரண்டு நாடுகளுமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் துருக்கியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக மிகப்பெரிய துயரம் ஏற்படும் முன்பாக அதை இயற்கையானது உணர்த்தும். பறவைகள், விலங்குகளுக்கு இயற்கை பேரிடர் முன்கூட்டியே தெரியவரும்.

trukey

இந்நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலநடுக்கம் ஏற்படும் முன்னர் பறவைகள் காசியான்டேப் சுற்றி வட்டமடித்துள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 

நிலநடுக்கத்தை உணர்த்தவே பறவைகள் அவ்வாறு பறந்து திரிந்ததாக சமூக வலைதளத்தில் பலரும் கருத்து பதிவிட்டனர்.