அக்டோபர் 07 ஆம் திகதி நடக்கவிருக்கும் 2022 போட்டிகளுக்கான ஏலம்!

Prasuat day's ago

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். 2021 சீசன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.  தற்போது  ஐ.பி.எல். தொடர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனால், ரசிகர்கள் ஐ.பி.எல். தொடரை எதிர்பார்த்து ஆவலுடன் இருக்கின்றனர். 

அடுத்த ஆண்டு இரண்டு அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட இருக்கின்றன. இதற்கான டெண்டரை ஏற்கனவே பி.சி.சி.ஐ. வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் புதிய அணிகளுக்கான  மெகா ஏலம் அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டு அணிகள் கூடுதலாக சேர்வதால், ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டு பிற வீரர்களை வெளியேற்ற வேண்டும். அதன்பின் பொது ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.