அமெரிக்க பைசர் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக செலுத்தலாம்.

#world news
Kesariat day's ago

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை, 3வது டோஸ் செலுத்த அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்தது. இதை ஆய்வு செய்த நிபுணர் குழு, 'பைசர் தடுப்பூசியின் 3வது டோசை 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ளவர்களுக்கு செலுத்தலாம்' என, பரிந்துரை செய்தது. இதையடுத்து, அமெரிக்காவில் பைசர் தடுப்பூசியின் 3வது டோஸை செலுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

'65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய் தொற்று அபாயம் உள்ள இளைஞர்கள் 3வது டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்; முதல் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 மாதத்துக்கு பின் 3வது டோசை போட்டுக் கொள்ளலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.உலக அளவில் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி அளித்த முதல் நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.