2021 -2022 சாம்பியன்ஸ் லீக் ஆரம்பம்

Prasuat day's ago

கிளப் கால்பந்தின் மிகப்பெரிய தொடரான சாம்பியன்ஸ் லீக் இன்று  தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் செல்சீ, பார்சிலோனா, பி.எஸ்.ஜி, மான்செஸ்டர் சிட்டி போன்ற முன்னணி அணிகள் உள்பட 32 கிளப்கள் இந்தத் தொடரில் மோதவுள்ளன.

இந்த சீசனின் இறுதிப் போட்டி மே 18, 2022-ல் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடக்கவிருக்கிறது. இந்த சீசன் மிகமுக்கிய மாற்றமாக, 'அவே கோல்' விதி நீக்கப்பட்டிருக்கிறது.

மெஸ்ஸி பார்சிலோனாவை விட்டு பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு ஒப்பந்தமாகியிருப்பது, ரொனால்டோ மீண்டும் மான்செஸ்டர் யுனைடட் அணியில் இணைந்திருப்பது, பார்சிலோனா பல முன்னணி வீரர்களை இழந்திருப்பது போன்ற விஷயங்கள் இந்த சீசன் மீது அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.