பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே பதவி விலகிய சுவீடன் முதல் பெண் பிரதமர்!

Rehaat day's ago

பட்ஜெட் தோல்வி மற்றும் கூட்டணி கட்சி விலகல் உள்ளிட்ட காரணங்களால் பதவியேற்ற சில மணி நேரங்களில் சுவீடன் முதல் பெண் பிரதமர் மாக்டெலனா ஆண்டர்சன் பதவி விலகினார்.

சுவீடன் நாடாளுமன்றத்தில் மாக்டெலனா ஆண்டர்சன் தாக்கல் செய்த பட்ஜெட்டை கூட்டணி கட்சியான கிரீன்ஸ் பார்ட்டி வலது சாரி கொள்கைகள் உடைய எதிர்கட்சியான சுவீடன் ஜனநாயக கட்சியுடன் இணைந்து நிராகரித்தது.

இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த மாக்டெலனா ஆண்டர்சன், ஒற்றை தலைமை கொண்ட ஆட்சியை வழிநடத்த விரும்புவதாக தெரிவித்தார். பிரதமரின் விலகல் முடிவை அடுத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என சபாநாயகர் Andreas Norlen தெரிவித்துள்ளார்.